ரூ.5 லட்சத்திற்குள் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டம்

Nissan Micra
வரும் 2014ம் ஆண்டுக்குள் 3 புதிய கார்களை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் அனைத்தும் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் விலை கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி ஏ-ஸ்டார், வேகன்ஆர், ஹூண்டாய் ஐ-10 மற்றும் செவர்லே பீட் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் விதத்தில் 2013-14 இடைப்பட்ட காலத்தில் அறிமுகப்படுத்த நிசான் முடிவு செய்துள்ளது. இந்த கார்ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலையில் வரும் என்று நிசான் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்று, ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் விலையில் ஒரு குட்டிக்காரை அறிமுகப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது. இந்த கார் செவர்லே ஸ்பார்க், ஆல்ட்டோ கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார் தற்போது ஹிந்துஜா குழுமத்தின்(அசோக் லேலண்ட்) வாகன வடிவமைப்பு மையத்தில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, நிசான் மோட்டார்ஸ் கார்ப்பரேட் துணைத்தலைவர் கில்லிஸ் நார்மண்ட் கூறுகையில்,"இந்திய சந்தையில் கடும் போட்டியை கொடுக்கும் கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

ரூ.1.5 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கொண்ட பிரிவுகளில் புதிய கார்களை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சிறிய கார்களை வடிவமைப்பதற்காக புதிய நிறுவனங்களின் ஒத்துழைப்பை வரவேற்கிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, September 23, 2011, 12:10 [IST]
English summary
Nissan Motor Company is planning to launch 3 Hatchback car models in next 3 years. These car models may positioned in Rs.2 lakhs to Rs.5 lakh segment in the Indian market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+