மிடுக்கான தோற்றத்துடன் புதிய அக்கார்டு:ஹோண்டாசியல் அறிமுகம்

By
Honda Accord
மும்பை: மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் நிறைந்த புதிய அக்கார்டு காரை ஹோண்டா சியல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் நடுத்தர வகை செடான் கார்களுக்கு இந்திய சந்தையில் அதிக வரவேற்பு உள்ளது.இதில், அக்கார்டு மாடல் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற காராக வலம் வருகிறது.

இந்த நிலையில்,வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப புதுப்பொலிவுடன் கூடிய அக்கார்டு காரை ஹோண்டாசியல் நிறுவனம் டெல்லியில் அறிமுகப்படுத்தியுள்ளது.வடிவமைப்பு,தொழில்நுட்பம் என அனைத்திலும் ஹோண்டா அக்கார்டு மாற்றும் கண்டுள்ளது.

புதிய அக்கார்டு குறி்த்து ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கூறியதாவது:

"வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப எங்களது கார்கள் மேம்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.புதிய அக்கார்டு காரும் வாடிக்கையாளர்கள் விருப்பத்தை உணர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.இதன் வடிவமைப்பு மற்றும் சொகுசு வசதிகள் வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இந்த கார் 2.4லிட்டர் மற்றும் 3.4 லிட்டர் எஞ்சின் கொண்ட மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வெளிப்புறம் மற்றும் உட்புற வடிவமைப்புகளிலும் புதிய அக்கார்டில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில் இது, வாடிக்கையாளர்களின் எண்ண ஓட்டங்களை நிறைவு செய்யும் வகையில் இருக்கும்,"என்று கூறினார்.

டொயோட்டோ கேம்ரி,ஹூண்டாய் சொனாட்டா,நிசான் டீனா,ஸ்கோடா சூப்பர்ப்,வோக்ஸ்வேகன் ஜெட்டா ஆகிய கார்களுக்கு புதிய ஹோண்டா அக்கார்டு சரியான போட்டியை கொடுக்கும் என்று நிச்சயமாக கூறலாம்.

2.4லிட்டர் எஞ்சின் கொண்ட அக்கார்டு மாடல் ரூ.19.60லட்சம் முதல் ரூ.20.36லட்சம் விலையிலும், 3.4லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் ரூ.25.41லட்சம் விலையிலும் கிடைக்கும் என்று ஹோண்டா சியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 23, 2011, 11:23 [IST]
English summary
The upgraded version of Accord is finally launched by Honda Siel Cars India to the Indian market which will be priced at Rs16.9 lakhs- Rs25.41 lakhs.The CEO of the company said that the customer feedback always prompted it tooffer the models and Accord is accorded with such a move. The car, he added, is built with more features to its credit as the customers are on the demand for newer features now and then.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+