ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற அழகிகளுக்கு ஸ்கோடா ஃபேபியா பரிசு

Pantaloons Femina Miss India 2011 Fabia gift
மும்பை: ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அழகிகளுக்கு, ஸ்கோடா ஃபேபியா கார் பரிசாக வழங்கப்பட்டது.

இந்தியாவின் பிரபல ஃபேஷன் ஷோவான ஃபெமினா மிஸ் இந்தியா 2011 அழகி போட்டி சமீபத்தில் மும்பையில் நடந்தது. மும்பையிலுள்ள மெகபூப் ஸ்டுடியோவில் நடந்த இந்த வண்ணமயமான விழாவில், திரை நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளில் நடந்த இந்த அழகி போட்டியில், நூற்றுக்கணக்கான அழகிகள் கலந்துகொண்டு, தங்களது திறமையை முடிந்தவரை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தினர்.

பல்வேறு கட்டங்களாக நடந்த போட்டியில், பான்டலூன்ஸ் ஃபெமினாவின் மிஸ் இந்தியா வேர்ல்டு 2011 பட்டத்தை கனிஷ்தா தாங்கரும், மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் 2011 பட்டத்தை அங்கிதா ஷோரேவும், மிஸ் இந்தியா எர்த் 2011 பட்டத்தை ஹஸ்லீன் கவுரும் வென்றனர்.

பான்டலூன்ஸ் ஃபெமினா ஃபேஷன் ஷோ பட்டங்களை வென்ற அழகிகளுக்கு, அதிநவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த ஸ்கோடா ஃபேபியா கார் பரிசாக வழங்கப்பட்டது. பரிசாக வென்ற ஃபேபியா காருடன் மூன்று அழகிகளும் ஒய்யாரமாக போஸ் கொடுத்த அந்த கண்கொள்ளா காட்சியை கேமராக்கள் கிளிக்கி தள்ளின.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2011, 11:22 [IST]
English summary
The winners of the Pantaloons Femina Miss India (PFMI) 2011 pageant were awarded with the all new Skoda Fabias as prizes for the pageant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+