அடுத்த ஆண்டு புதிய ஹேட்ச்பேக் கார்: வோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்துகிறது

Volkswagen Up
டெல்லி: ரூ.3 லட்சம் விலை ரகத்தில் அப் ஹேட்ச்பேக் காரை அடுத்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது பிராண்டுக்கு இந்தியாவில் தனிமதிப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களுக்கும் தகுந்தாற்போல், போலோ, வென்ட்டோ மற்றும் ஜெட்டா உள்ளிட்ட அருமையான பில்டு குவாலிட்டி கொண்ட கார்களை வோக்ஸ்வேகன் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய மார்க்கெட்டின் தட்பவெப்பத்தை உணர்ந்துகொண்டுள்ள வோக்ஸவேகன், தனது அட்டகாசமான அப் ஹேட்ச்பேக் காரை அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் களமிறக்குகிறது.

ரூ.3 லட்சத்தில் இந்த காரை அறிமுகப்படுத்த வோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருப்பதால் வாடிக்கையாளர் மத்தியில் தற்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

1.2 லிட்டர் எஞ்சினுடன் வரும் இந்த கார் 59 பிஎச்பி ஆற்றலையும், லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் செல்லும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் அறிமுகப்படுத்த இருக்கின்ற மாருதியின் புதிய 800 மற்றும் ஹூண்டாய் 800 கார்களுக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுக்கும் அனைத்து அம்சங்களும் இதில் இருக்கும்.

மாருதி வேகன்-ஆர் போன்று டால்பாய் கான்செப்ட் கொண்ட இதன் வடிவமைப்பு அசத்துகிறது. உள்புறமும் தாராள இடவசதியை கொண்டிருக்கும்.

விரைவில் துவங்க இருக்கும் பிராங்பர்ட் மோட்டோர் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும், இந்த கார் அடுத்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் களமிறங்குகிறது.

இந்திய மார்க்கெட்டில் சிறிய கார்களுக்கு தேவை அதிகம் இருப்பதால், தரமான பில்டு குவாலிட்டியுடன் குறைந்த விலையில் வரும் இந்த கார் நிச்சயம் பெரிய அளவிலான இடத்தை பிடிக்கும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 23, 2011, 10:34 [IST]
English summary
One enduring segment of the Indian car market even in the midst of a slowdown in the overall car sales growth has been the small car segment. Now, Volkswagen too wants the ever growing pie of the Indian small car market and hence, the just unveiled Volkswagen Up!, which has been showcased just before the upcoming 2011 Frankfurt Motor Show, will make it to the Indian car market. 2012 is when Volkswagen India might launch the Up! for the Indian car market, albeit in a 5 door version.2012 Volkswagen Up! Small Car.The car is currently available with a 1 liter, 59 Bhp petrol engine that uses turbocharging and direct injection to endow it with a terrific claimed fuel economy figure close to 24 KMPL. The Volkswagen Up! currently doesn’t yet have a diesel engine in its kitty although we think that a diesel engine will definitely be in the scheme of things as Volkswagen has an ultra frugal 800cc, three pot common rail diesel engine in its kitty.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+