கார் ஓட்டுவதில் கில்லாடி ஆணா? பெண்ணா?-சுவாரஸ்ய சர்வே

Car Driving
லண்டன்: கார் ஓட்டுவதில் கில்லாடி யார் கேட்டவுடன் தாமதிக்காமல், ஆண்களே என்று கூறுவது இயல்பு. ஆனால், பெண்களே அந்த விஷயத்தில் கில்லாடி என்று கூறுகிறது பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு.

கார் ஓட்டுவதில் ஆண்களே சிறந்தவர்கள் என்ற பரவலான கருத்து நிலவுகிறது. கார் ஓட்டும்போது பெண்கள் மிகவும் அஜாக்கிரதையாக நடந்து கொள்வதால், பல இடங்களில் விபத்துக்களும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் எழுகின்றன.

இந்நிலையில், கார் ஓட்டுவதில் யார் சிறந்தவர்கள் என்பதை அறிந்துகொள்ள லண்டனை சேர்ந்த சான்டன்டர் என்ற காப்பீட்டு நிறுவனம் விபத்தில் சிக்கிய ஆண், பெண்களிடம் கருத்து கேட்கும் படலத்தை நடத்தியது. இதன் முடிவில் வெளியிடப்பட்ட தகவல்கள் நமது எண்ணங்களை தவிடுபொடியாக்கியுள்ளன.

ஆய்வில் கலந்துகொண்ட ஆண்களில் பத்து பேரில் ஒருவர் தங்களது அஜாக்கிரதையால் விபத்துக்களில் சிக்கியதாக தெரிவித்தனர். அதேவேளை, பெண்களில் 20 பேரில் ஒருவர் மட்டுமே, தங்களது அஜாக்கிரதையால் விபத்தில் சிக்கியதாக தெரிவித்தனர்.

கார் ஓட்டும்போது காதலிக்கு முத்தம் கொடுப்பது, தலையை ஸ்டைலாக கோதி்க்கொள்வது, சாலையில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி அக்கம் பக்கம் திரும்புவது, கார் ஆடியோ சிஸ்டத்தை அட்ஜஸ்ட் செய்வது என கார் ஓட்டுவதை விட்டுவிட்டு மற்ற 'முக்கிய' வேலைகளில் ஆண்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக ஆய்வில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மேலும், காரை ஓட்டிக்கொண்டே 'குளிர்'பானம் அருந்துவது, சாப்பிடுவது போன்றவற்றை பல ஆண்கள் வழக்கமாக கொண்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைவிட கொடுமை, கார் ஓட்டும்போதுதான் பலர் தங்களுக்கு பிடித்தமான இசையை கேட்பதற்கு, டேஷ்போர்டில் சி.டி., தேடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தித்தாள் படிப்பது, மொபைல்போன் பேசுவது, முகச்சவரம் செய்வது, வரைபடத்தில் இடத்தை தேடுவது உள்ளிட்ட அதிமுக்கிய வேலைகளை பலர் காரை ஓட்டிக்கொண்டே செய்வதாக, அதாவது குடும்பம் நடத்துவதை தவிர பாக்கி எல்லாவற்றையும் கார் ஓட்டும்போது செய்வதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பெண்கள் கார் ஓட்டும்போது ஆண்களைவிட படு பக்குவமாக நடந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 23, 2011, 14:38 [IST]
English summary
Most people have a prejudice that women are bad drivers and they end up causing more traffic jams and accidents than men. To get the right answer for ‘which gender is the worse driver’ London based Insurance Company conducted a survey.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+