இந்த ஆண்டிலேயே குட்டி காரை அறிமுகப்படுத்த பஜாஜ் தீவிரம்

Bajaj Small Car
டெல்லி: ரூ.1.5 லட்சம் விலை கொண்ட குட்டி காரை இந்த ஆண்டிலேயே அறிமுகப்படுத்துவதற்கு பஜாஜ் ஆட்டோ தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் பஜாஜ் நிறுவனம், பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனத்துடன் இணைந்து குட்டி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. கார் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பணிகளை பஜாஜ் கவனிக்கும். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையை ரினால்ட் நிறுவனம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வடிவமைப்பு, பிராண்டு பெயர் வைப்பது உள்ளிட்டவற்றில் எழுந்த பிரச்னைகளால் குட்டி கார் தயாரிக்கும் பணிகள் தடைபட்டது. இதுதொடர்பாக, பஜாஜ் ஆட்டோ மற்றும் ரினால்ட் நிறுவன அதிகாரிகளிடையே நடந்த பேச்சுவார்த்தைகளில் தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, குட்டி கார் தயாரிக்கும் பணிகளை பஜாஜ் ஆட்டோ முடுக்கிவிட்டுள்ளது. காரின் வடிவமைப்பு குறித்து ரினால்ட் நிறுவனம் திருப்தி தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், எதிர்பார்த்ததற்கு முன்னதாகவே குட்டிகார் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ மேலாண் இயக்குனர் கூறுகையில்," நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை மனதில்கொண்டு குட்டி கார் வடிவமைக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த குட்டி கார் லிட்டருக்கு 30 கி.மீ., செல்லும் என்பதால், எரிபொருள் சிக்கனத்தில் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டிலேயே காரின் மாதிரியை வெளியிட திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2011, 13:13 [IST]
English summary
The second largest two wheeler company in India, Bajaj Auto is on the top gear to introduce the prototype of its small car meant for Renault marketing. This Ultra Low Cost car is to be showcased at any time this year and moves are on fast track, said its MD
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+