ரூ.1 கோடி விலையில் பிஎம்டபிள்யூ களமிறக்கும் புதிய சொகுசு கார்

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.
மேலும், மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி நிறுவனங்களால் கடும் சந்தை போட்டியை எதிர்கொண்டு வரும் பிஎம்டபிள்யூ தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் தனது புதிய எம்-5 எப்-10 சொகுசு செடான் காரை அறிமுகப்படுத்துகிறது பிஎம்டபிள்யூ.
அதிக இடவசதி, நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் பவர்ஃபுல் எஞ்சின என அனைத்திலும் கூடுதல் அம்சங்களை கொண்ட இந்த கார் ரூ.99 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
புதிய எம்-5 சொகுசு காரில் 4.4 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 55 பிஎச்பி(550 ஹார்ஸ்பவர்) ஆற்றலை வாரி இறைக்கும் திறன் கொண்டது. மேலும், வெறும் 5 நொடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டிவிடும்.
மேலும், இந்த கார் இதன் முந்தைய மாடல்களைவிட 31 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்தை தர வல்லது. இது லிட்டருக்கு 10.1 கிமீ மைலேஜ் தரும் என்று பிஎம்டபிள்யூ தெரிவிக்கிறது.
மேலும், இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிமீ வேகத்தில் செல்லும். வடிவமைப்பிலும் இந்த கார் அசத்துகிறது.லெதர் அப்ஹோல்ஸ்டரி, எல்சிடி இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் ஸ்விட்சுகள் என எந்தவொரு அம்சத்திற்கும் குறைவில்லை.
இதன் இரட்டை குழல் சைலென்சர் கூடுதல் கவர்ச்சியை கொடுக்கிறது. இந்த புதிய கார் டெல்லி ஆட்டோ கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களை வெகுவாக அசத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.


Click it and Unblock the Notifications








