அடுத்த 2 மாதங்களில் மினி பிராண்டு கார்கள் இறக்குமதி : பிஎம்டபிள்யூ

Mini Cooper
அடுத்த இரண்டு மாதங்களில் மினி பிராண்டு கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனை சேர்ந்த மினி பிராண்டு சொகுசு கார்கள் மிகவும் பிரபலமானவை. மினி கார் நிறுவனம் தற்போது ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் சொகுசு கார் விற்பனை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருவதாலும், போட்டியை சமாளிக்கும் விதத்திலும் மினி பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய பிஎம்டபிள்யூ முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, பரிசீலித்து வருவதாக சமீபத்தில் பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் கூறியிருந்தது. இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் மினி பிராண்டு கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்ய பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

மேலும், வரும் ஆண்டு ஜனவரியில் டெல்லியில் நடைபெற உள்ள டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் மினி பிராண்டு கார்களை அறிமுகம் செய்தவுடன் விற்பனையை துவங்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, டெல்லி மற்றும் மும்பையில் புதிய ஷோரூம்களை திறக்கப்பட உள்ளது.

மினி கூப்பர், கன்ட்ரிமேன், கிளப்டோர் மற்றும் கேப்ரியோ உள்ளிட்ட அனைத்து மினி பிராண்டு கார் மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ரூ.25 லட்சம் முதல் மினி பிராண்டு கார்கள் விற்பனைக்கு வர இருப்பதாக பிஎம்டபிள்யூ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, September 24, 2011, 12:06 [IST]
English summary
BMW plans to launch Mini brand cars in India by Next few months. These cars will imported via CBU route. BMW to open two showrooms in Delhi and Mumbai. The all models of the Mini cars will come to indian shores. Mini cars to enter india at Rs.25 lakhs starting price.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+