கார் வாங்கும்போது ஆன்லைனில் தவம் கிடக்கும் இந்தியர்கள்!

Car Buy
கார் வாங்கும்போது அதுபற்றிய தகவல்களை 95 சதவீதம் இந்தியர்கள் ஆன்லைன் மூலமாக தேடி பெறுவதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் பிரபலமான கன்சல்டன்சி நிறுவனமான கேப்ஜெமினி ஆன்லைன் பயன்பாடு பற்றிய முழுமையான ஆய்வு ஒன்றை உலக அளவில் மேற்கொண்டது. இதில், கார் வாங்கும்போது வாடிக்கையாளர்கள் தகவல்களை சேகரிப்பது குறித்த பிரத்யேக ஆய்வையும் நடத்தியது.

இந்தியா, சீனா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மொத்தம் 8,000 கார் உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், பெரும்பாலான வாடிக்கையாளர்கள் கார் வாங்கும்போது ஷோரூம்களுக்கு சென்று தகவல்களை தெரிந்து கொள்வதை தவிர்த்து ஆன்லைன் மூலமே தகவல்களை பெற்றுள்ளனர்.

மேலும், ஆய்வில் கலந்து கொண்ட இந்தியர்களில் 95 சதவீதம் பேர் ஆன்லைன் மூலமாகவே கார் பற்றிய தகவல்களை தெரிந்துகொண்டுள்ளனர். இதில், முக்கியமான விஷயம் சோஷியல் மீடியாக்களில் வாடிக்கையாளர்கள் கார்கள் பற்றி எழுதும் கருத்துக்களையும் அவர்கள் அடிப்படையாக கொண்டு காரை தேர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

இதில், சோஷியல் மீடியாக்களில் எழுதப்படும் கருத்துகளில் மோசமான விமர்சனங்களை பெறும் பிராண்டு மாடல்களை தவிர்த்ததாகவும், சிறந்த விமர்சனம் செய்யப்பட்டிருந்த கார் மாடல்களில் மட்டும் தேர்வுக்கு எடுத்துக்கொண்டு கார் வாங்கியதாகவும் இந்தியர்கள் கூறியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, December 24, 2011, 11:46 [IST]
English summary
The number of Indian consumers during the vehicle buying process researching online reached 95 per cent in 2011, up from 86 per cent in 2010. Capgemini, one of the world's foremost providers of consulting, technology and outsourcing services, recent survey said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+