கார்களுக்கு பண்டிகை கால சலுகைகள்: ஹோண்டா அறிவிப்பு

சிவிக் மற்றும் அக்கார்டு கார்களில் ஆடியோ விஷுவல் நேவிகேஷன் சிஸ்டத்தை(ஏவிஎன்) பொருத்தி தருவதாக தெரிவித்துள்ளது.
டச் ஸ்கிரீன் வசதி, நேவிகேஷன் சிஸ்டம்,டிவிடி ப்ளேயர், புளூடூத், ரியர் பார்க்கிங் கேமரா, ஐபோட் மற்றும் ரேடியா ட்யூனர் ஆகிய அனைத்து ஒருங்கிணைந்த வசதிகளையும் இந்த ஏவிஎன் சிஸ்டம் வழங்கும்.
இதுதவிர, காருக்கு ஒரு ரூபாயில் ஓர் ஆண்டுக்கான இன்ஸ்யூரன்சை இலவசமாக வழங்குவதாகவும் ஹோண்டா அறிவித்துள்ளது.
மேலும், எளிய கடன் திட்டங்கள், நீட்டிக்கப்பட்ட வாரண்டி, 4 ஆண்டுகளுக்கு ரோடு சைடு அசிஸ்டென்ட் ஆகிய சலுகைகளையும் பெற்றுக்கொள்ளலாம் என ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஃபியட், வோக்ஸ்வேகனை தொடர்ந்து ஹோண்டாவும் தற்போது சிறப்பு சலுகைககளை வழங்குவதாக அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








