4 புதிய ஃபேபியா வேரியண்ட்டுகளை அறிமுகம் செய்தது ஸ்கோடா

ஸ்கோடா நிறுவனத்தின் ஃபேபியா கார்கள் பில்டு குவாலிட்டிக்கு பெயர் பெற்றதாக திகழ்கிறது. இந்த நிலையில், ஹேட்ச்பேக் கார் சந்தையில் ஏற்பட்டுள்ள போட்டியை சமாளிக்கும் விதமாக 4 புதிய ஃபேபியா வேரியண்ட்டுகளை ஸ்கோடா அறிமுகம் செய்துள்ளது.
ஆக்டிவ், ஆக்டிவ் ப்ளஸ், ஆம்பிஷன் மற்றும் ஆம்பிஷன் ப்ளஸ் ஆகிய பெயர்களில் 1.2 லிட்டர் எஞ்சின் கொண்டதாக ஃபேபியா வந்துள்ளது.வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய ஃபேபியா மாடல்கள் இருக்கும் என ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மாடல் ஃபேபியா ரூ.4.4 லட்சத்திலிருந்தும், டீசல் மாடல் ஃபேபியா மாடல் ரூ.5.53 லட்சம் விலையிலிருந்தும் கிடைக்கும் என ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








