விற்பனை சரிவு: கார் உற்பத்தியை 33% குறைத்தது டாடா மோட்டார்ஸ்

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது, கார் கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டது உள்ளிட் காரணங்களால் கார் விற்பனை கடும் சரிவு கண்டு வருகிறது.
இதனால், டீலர்களில் கார்கள் இருப்பு அதிகரித்துள்ளது. கார் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது பல முன்னணி கார் நிறுவனங்கள் கலக்கமடைய செய்துள்ளன.
இருப்பினும், வரும் தீபாவளியையொட்டிய பண்டிகைகாலத்தில் கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று கார் நிறுவனங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்த நிலையில், டீலர்களில் கார்கள் தேக்கமடைந்துள்ளதை கருத்தில்க்கொண்டு பல நிறுவனங்கள் கார் உற்பத்தியை குறைத்துள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது அனைத்து கார்களின் உற்பத்தியையும் 33 சதவீதம் வரை குறைத்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் 17,841 நானோ கார்களை உற்பத்தி செய்த அந்த நிறுவனம் நடப்பு செப்டம்பரில் வெறும் 12,000 கார்களை மட்டும் உற்பத்தி முடிவு செய்துள்ளது. இதேபோன்று, அனைத்து கார் மாடல்களின் உற்பத்தியையும் டாடா மோட்டார்ஸ் வெகுவாக குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








