8 பேர் பயணம் செய்யும் வசதியுடன் தோஸ்ட் பாசஞ்சர் வேன்: லேலண்ட் அறிவிப்பு

Ashok Leyland Dost
நிசான் நிறுவனத்துடனான கூட்டணியில் தோஸ்ட் மினி டிரக்கை சமீபத்தில் அசோக் லேலண்ட் அறிமுகம் செய்தது. 1.25 டன் கொள்ளளவு திறனுடன் வருகை தந்துள்ள தோஸ்ட் புத்தம் புது வடிவமைப்பிலும், அதிநவீன வசதிகள் கொண்ட கேபினுடன் சந்தையில் களமிறங்கி புயலை கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், தோஸ்ட் மினிடிரக் பேஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டு தோஸ்ட் பாசஞ்சர் வேனையும் களமிறக்க லேலண்ட்-நிசான் கூட்டுக்குழுமம் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.

இன்னும் ஓர் ஆண்டுக்குள் தோஸ்ட் பாசஞ்சர் வேனை அறிமுகம் செய்ய லேலண்ட்-நிசான் திட்டமிட்டுள்ளது. ஐதராபாத்தில் தோஸ்ட் மினிடிரக் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில், ஹிந்துஜா ஆட்டோமோட்டிவ் பிரிவு துணைத்தலைவர் டாக்டர் வி.சேதுராமன் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது,"தோஸ்ட் மினி டிரக்கின் பிளாட்பார்மில் புதிய பாசஞ்சர் வேனை வடிவமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. புதிய தோஸ்ட் பாசஞ்சர் வேனில் 7 பேர் முதல் 8 பேர் வரை பயணம் செய்யலாம். இன்னும் ஓர் ஆண்டுக்குள் அந்த வேன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Sunday, September 25, 2011, 11:17 [IST]
English summary
Ashok Leyland-Nissan joint venture vigorously working on a New passenger van may launch next year. The new passenger van designing the Dost Minitruck plantform and it will be a 7 to 8 persons sitting capacity.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+