கார் விலையை உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்

Tavera Black Gold
தனது அனைத்து மாடல் கார் விலையையும் 2 சதவீதம் உயர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

உற்பத்தி செலவீனம் தொடர்ந்து அதிகரித்துவருவதையடுத்து, அவ்வப்போது கார்களின் விலையை அனைத்து கார் நிறுவனங்களும் உயர்த்துவது வாடிக்கையாகிவிட்டத.

மஹிந்திரா,டொயோட்டோ ஆகிய நிறுவனங்கள் கார்களுக்கான விலை உயர்வை சமீபத்தில் அறிவித்துவிட்டன. இந்த நிலையில், செவர்லே பிராண்டு பெயரில் கார் விற்பனை செய்து வரும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது அனைத்து கார்களின் விலையையும் 2 சதவீதம் உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் கார்ல் ஸ்லிம் கூறுகையில்,"உற்பத்தி செலவீனம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுகுறித்து அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறோம். உற்பத்தி செலவீனம், மார்க்கெட் நிலவரத்தை பொறுத்து கார் விலையை உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் முடிவு செய்ய உள்ளோம்," என்று கூறினார்.

அமெரி்க்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செவர்லே பிராண்டில் ஸ்பார்க், பீட், தவேரா, கேப்டிவா உள்ளிட்ட கார்களை விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 25, 2011, 10:56 [IST]
English summary
General motors planning to hike the car price due the increasing of output costs. It will take the decision in review meeting next month. Gm may hike the price upto 2% in all models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+