இந்திய சாலைகளில் தூசி தட்ட வரும் ரினால்ட் 'டஸ்ட்டர்'

மஹிந்திரா கூட்டுக்குழுமத்தில் இருந்து பிரிந்தவுடன், இந்திய சந்தையில் தனித்து இறங்கியுள்ள பிரான்சை சேர்ந்த ரினால்ட் நிறுவனம் புளூயன்ஸ் சொகுசு செடான் காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும், 5 புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்போவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் கோலியோஸ் எஸ்யூவீ காரை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் கீ மாடல்களில் ஒன்றான டஸ்ட்டர் எஸ்யூவீ காரை அடுத்த ஆண்டு மத்தியில் இந்திய சந்தையில் களமிறக்கப்போவதாக தெரிவித்துள்ளது.
எஸ்யூவீ ரகத்தை சேர்ந்த டஸ்ட்டரை ரூ.10 லட்சத்திற்குள் களமிறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய கார் எஸ்யூவீ சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என ரினால்ட் நம்பிக்கையுடன் கூறியது.


Click it and Unblock the Notifications








