மேலும் ஒரு நானோ கார் தீப்பிடித்து எரிந்தது: டெல்லியில் சம்பவம்

Nano Fire
டெல்லியிலும் நேற்றிரவு நானோ கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த இளைஞரும் அவரது சகோதரியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

டெல்லி, கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் நிசாந்த்(25). இவர் நேற்றிரவு தனது சகோதரி சுமாவுடன்(35) வீட்டிலிருந்து கன்னாட் ப்ளேஸ் நோக்கி தனது நானோ காரில் சென்று கொண்டிருந்தார்.

வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது காரில் இருந்து புகை வந்துள்ளது. இதையடுத்து, காரை உடனடியாக நிறுத்திவிட்டு இருவரும் அவசரமாக கீழே இறங்கிவிட்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் கார் தீப்பற்றி எரியத்துவங்கியது. இதுகுறித்து, தகவலறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களை கொண்டு காரில் பற்றிய தீயை 15 நிமிடங்கள் போராடி அணைத்தனர்.

இந்த சம்பவத்தில் நிஷாந்தும், அவரது சகோதரியும் மயிரிழையில் உயிர் தப்பினர். குஜராத், இலங்கை, சென்னை என்று அடுத்தடுத்து நானோ கார் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், டெல்லியிலும் ஒரு நானோ கார் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, September 26, 2011, 12:26 [IST]
English summary
Another Tata Nano fire incident is reported in Delhi on 25th September 11. The incident took place near ITO at around 8:15 PM Yesterday. Nishant (25), a student, and his sister Suma(35) were going to Connaught Place from their Krishna Nagar residence when the incident took place, PTI reported as police said. Similar cases were reported in Gujarat, Sri Lanka and Chennai recently. However no official word came out from the company side.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+