பஜாஜ் குட்டி கார் திட்டத்திலிருந்து விலக ரினால்ட் முடிவு?

Bajaj Small Car
டெல்லி: பஜாஜின் குட்டிக்கார் கனவு திட்டம் சோதனையை எதிர்நோக்கியுள்ளது. டாடா நானோவுக்கு போட்டியாக தயாரிக்க உள்ள குட்டி கார் திட்டத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக ரினால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னிலையில் உள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம், மிகக்குறைந்த விலை கொண்ட குட்டி கார் தயாரிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

டாடா நானோவுக்கு போட்டியாக வரவுள்ள இந்த காரை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரினால்ட் மற்றும் ஜப்பானை சேர்ந்த நிசான் கூட்டுக் குழுமத்தின் ஒத்துழைப்புடன் சந்தைப்படுத்த பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், பஜாஜ் தயாரித்து வரும் சிறிய கார் எதிர்பார்த்த அளவு இல்லை என்று ரினால்ட் அதிருப்தி தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் இந்த திட்டத்தில் இருந்து விலகவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரினால்ட் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மார்க் நாசீப் கூறியதாவது:

"பஜாஜ் தயாரித்து வரும் சிறிய காரின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனை பொறுப்புகளை ஏற்றிருந்தோம். ஆனால், பஜாஜ் தயாரித்து வரும் சிறிய காரின் வடிவமைப்பு மற்றும் தரத்தில் எங்களுக்கு போதிய திருப்தி ஏற்படவில்லை.

எனவே, எங்களது நிறுவனத்தின் தரக்கொள்கைகளுக்கு ஒத்துப்போகும் வகையில் கார் தயாரிக்கப்பட்டால் மட்டுமே பஜாஜிடமிருந்து குட்டி காரை வாங்குவோம். இல்லாவிட்டால், திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளோம்.

இந்த திட்டம் தொடர்பாக, எங்களுக்கும் பஜாஜ் ஆட்டோவுக்கும் இடையில் கூட்டுகுழும அடிப்படையில் ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இதுபற்றி விரைவில் இறுதி முடிவு எடுக்க உள்ளோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2011, 9:58 [IST]
English summary
It's troubles galore for the ultra-low-cost car (ULC) project of Bajaj-Renault-Nissan alliance, that was expected to spring a rival to the Tata Nano. Renault, the French car major, sounded non-committal on the ambitious project on Monday, saying it may pull out if the car being developed and manufactured by Bajaj does not not meet its expectations.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+