சிறந்த பட்ஜெட் கார்கள்- சிறப்பு பார்வை

Alto K10
பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி வாடிக்கையாளர்கள் கார் வாங்கும் திட்டத்தை பட்டை தீட்டும் வேளை இது. அவர்களுக்கு உதவும் வகையில் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணி வகிக்கும் பட்ஜெட் கார்கள் பற்றிய சிறப்பம்சங்களை இங்கே காணலாம்.

மாருதி ஆல்ட்டோ:

இந்திய மார்க்கெட்டில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் கார். சிறந்த மைலேஜ், அழகிய வடிவமைப்பு ஆகியவை ஆல்ட்டோவுக்கு பலம். மேலும், மாருதியின் வலுவான சர்வீஸ் நெட்வொர்க்கும் ஆல்ட்டோவை தேர்வு செய்ய கூடுதல் காரணம்.

நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் 18 கிமீ அளவுக்கு மைலேஜையும் கொடுக்கும். சென்னையில் ரூ.2.84 லட்சம் முதல் ரூ.3.19 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலைகளில் ஆல்ட்டோ விற்பனை செய்யப்படுகிறது.

செவர்லே ஸ்பார்க்:

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கியாரண்டி கொடுக்கும் கார். இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிறிய கார் மாடல்களில் சொகுசு வசதிகள் மற்றும் வடிவமைப்பில் நல்ல பெயர் வாங்கியுள்ள மாடல். அதிக ஆண்டுகள் வாரண்டியுடன், குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட கார்.

வெளிப்புறத் தோற்றத்தில் மட்டுமல்லாது உட்புறத்தில் தரமான பிளாஸ்டிக்குகள், நல்ல இடவசதி என்பதும் ஸ்பார்க்கின் பலம். நகர்ப்புறங்களில் லிட்டருக்கு 12 கிமி மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் லிட்டருக்கு 18 கிமீ மைலேஜையும் கொடுக்கும். ரூ.3.11 லட்சம் முதல் ரூ.4.31 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

மாருதி ஏ-ஸ்டார்:

ஐரோப்பிய சந்தையில் ஆல்ட்டோ என்று பெயரில் விற்பனை செய்யப்படும் ஏ-ஸ்டார் மாருதி தயாரிப்புகளில் ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார். ஏற்றுமதி தரத்துடன் தயாரிக்கப்படும் ஏ-ஸ்டாரில் 1,000 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஹைவேரியண்ட் கார்களில் உள்ளதுபோன்று ஏர்பேக்குகள், ஆன்ட்டி லாக்கிங் பிரேக்கிங் சிஸ்டம்(ஏபிஎஸ்) போன்ற பாதுகாப்பு வசதிகளுடன் கிடைக்கிறது.

நகர்ப்புற டிரைவிங்கில் லிட்டருக்கு 13 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் 17 கிமீ மைலேஜையும் கொடுக்கும். சென்னையில் ரூ.3.66 லட்சம் முதல் ரூ.4.44 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி ஸென் எஸ்டிலோ:

அதிக மைலேஜ், குறைந்த விலை என்ற மாருதியின் தாரக மந்திரத்தை பரைசாற்றும் கார். கியர் மாற்றும்போது மிகவும் ஸ்மூத்தாக இருக்கும் தொழில்நுட்பத்துடன் எஸ்டிலோ வருகிறது. உட்புறம் தரமான பாகங்களையும் அழகான வடிவமைப்பையும் கொண்ட பட்ஜெட் கார்களில் எஸ்டிலோவும் ஒன்று. சிறிய குடும்பத்தினருக்கும் வீடுகளில் பார்க்கிங் பிரச்னை இருப்பவர்களுக்கும் ஏற்ற கார்.

பெட்ரோல் மற்றும் எல்பிஜி மாடல்களில் கிடைக்கும் எஸ்டிலோ நகர்ப்புற டிரைவிங்கின்போது லிட்டருக்கு 14 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலை டிரைவிங்கின்போது லிட்டருக்கு சராசரியாக 18 கிமீ மைலேஜையும் கொடுக்கும். சென்னையில் ரூ.3.64 லட்சம் முதல் ரூ.4.20 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, September 26, 2011, 13:01 [IST]
English summary
Festival season fever is starting now. Many car companies announces special offers to attract the buyers. So, the buyers also preparing to buy of their dream machine this festive season. We are giving some budget cars specifications and features. It will useful for the buyers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+