ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து பொறித்த பஸாத் கார் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்

Volkswagen Passat
மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்றுள்ள அணிகளின் கேப்டன்கள் கையெழுத்திட்ட வோக்ஸ்வேகன் பஸாத் கார் ரூ.30 லட்சத்துக்கு ஏலம் போய் பிரமிக்க வைத்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் அனைத்து அணிகளின் கேப்டன்கள் கையெழுத்திட்ட வோக்ஸ்வேகன் பஸாத் காரை இ-பே என்ற நிறுவனம் ஆன்லைன் ஏலத்தில் விட்டது. மொத்தம் 10 நாட்கள் கால அவகாசத்துடன் நடந்த இந்த ஏலம், கடந்த 10ந் தேதியுடன் முடிந்தது.

இதில், பெங்களூரை சேர்ந்த சாய்தாஸ் மல்லாடி என்பவர் ரூ.30 லட்சம் கொடுத்து அந்த பஸாத் காரை ஏலத்தில் எடுத்துள்ளார். அவருக்கு பஸாத் காருடன் அனைத்து அணிகளின் கேப்டன்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

ஏலத்தில் கிடைத்த தொகை டபிள்யூடபிள்யூஎப் என்ற வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கப்பட்டது. இதற்கு முன் நடந்த விளையாட்டு போட்டி தொடர்பான ஏலங்கள் அனைத்தையும் தற்போதைய ஏலத்தொகை மிஞ்சிவிட்டதாக இ-பே நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2011, 12:42 [IST]
English summary
The Indian auto market witnessed one of the most publicized online auctions till date on Tuesday when a Volkswagen Passat sedan was sold for over Rs 30 lakh on eBay India. The car is embellished with the signatures of all T20 cricket teams. The proceeds from the auction of this car will be given to WWF India, an organization that is into wildlife and nature conservation.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+