ரூ.7.2 லட்சத்தில் புதிய ஸ்கார்ப்பியோ-இஎக்ஸ்:மஹிந்திரா அறிமுகம்

Scorpio EX
டெல்லி: ரூ.7.2 லட்சம் விலையில் புதிய ஸ்கார்ப்பியோவை களமிறக்கியுள்ளது மஹிந்திரா நிறுவனம். இதனால், எஸ்.யூ.வீ. கார் மார்க்கெட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய ஸ்கார்ப்பியோவில் 75 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் சிஆர்டிஐ எஞ்சினை பொருத்தியுள்ளது மஹி்ந்திரா. இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் புதிய ஸ்கார்ப்பியோ லிட்டருக்கு 14 கி.மீ. செல்வதாக கூறியுள்ளதால், மார்தட்டி கொள்கிறது மஹிந்திரா.

மேலும், அதிக எரிபொருள் சிக்கனத்தை தரும் மைக்ரோ-ஹைபிரிட் தொழில்நுட்பமும் ஸ்கார்ப்பியோவின் சந்தையை வலுப்படுத்துகிறது. கார் திருடர்களிடமிருந்து பாதுகாக்க டிஜிட்டல் இம்மொபைலைசருடன் வந்துள்ளது புதிய ஸ்கார்ப்பியோ-இஎக்ஸ்.

மேலும், கண்ணைக்கவரும் ராக்கி பெய்ஜ், டைமண்ட் வொயிட், பியரி பிளாக், மிஸ்ட் சில்வர் ஆகிய நான்கு கலர்களில் ஸ்கார்ப்பியோ ஜொலிக்கிறது. சந்தையில் ஸ்கார்ப்பியோவுக்கு நேரடி போட்டி கொடுத்து வரும் டாடா சபாரி எஸ்.யூ.வீ.யின் ஆரம்ப விலை ரூ.8.17 லட்சமாக உள்ளது.

ஆனால், அதைவிட ஒரு லட்சம் வரை குறைவான விலையில் அதிக அம்சங்கள் கொண்ட புதிய ஸ்கார்ப்பியோவை மஹிந்திரா களமிறக்கியுள்ளதால் எஸ்.யூ.வீ. கார் மார்க்கெட்டில் போட்டி கடுமையாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 26, 2011, 12:47 [IST]
English summary
Another distinctive step to penetrate in the Indian auto market as Mahindra launched new variant of its Scorpio model – The Scorpio EX which comes with a price tag of Rs. 7.2 lakh.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+