மார்க்கெட்டை பிடிக்க புதிய வடிவமைப்பில் பாலியோ:ஃபியட் பரிசீலனை

By
Fiat Palio
டெல்லி: இந்திய மார்க்கெட்டை பிடிக்க புதிய வடிவமைப்புடன் கூடிய பாலியோ காரை புதிய பெயரில் அறிமுகம் செய்வது குறித்து ஃபியட் நிறுவனம் தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம்,டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் கார் வி்ற்பனையில் ஈடுபட்டு வருகிறது.டாடா மோட்டார்ஸ் ஷோரூம்களிலேயே ஃபியட் கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில்,கடந்த ஆண்டு ஃபியட் கார் விற்பனை அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்தது. இதனால்,கவலையில் ஆழ்ந்துள்ள ஃபியட் நிறுவனம்,கார் விற்பனையை உயர்த்த தீவிரமாக முயன்று வருகிறது. தனது கார்களுக்கு தனி ஷோரூம்கள் அமைத்து விற்பனையை பெருக்கவும் ஃபியட் முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஃபியட் நிறுவனத்தின் புண்ட்டோ,லீனியா கார்கள் விற்பனை ஓரளவுக்கு நடக்கிறது.ஆனால்,எதிர்பார்த்த விற்பனை இலக்கை ஃபியட் நிறுவனத்தால் எட்ட முடியவில்லை.மேலும்,ரூ.4லட்சம் விலை கொண்ட பிரிவில் உள்ள கார்களின் விற்பனை இந்திய சந்தையில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.

ஆனால்,புண்ட்டோ கார் விற்பனையை பெருக்கும் நோக்கத்தில் ஹேட்ச்பேக் பிரிவில் இருந்த பாலியோ கார் விற்பனையையும் ஃபியட் நிறுத்தியது.இந்நிலையில்,மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க ரூ.4லட்சம் பிரிவில் பாலியோ காரை இறக்குவதே சிறந்த வழி என ஃபியட் கருதுகிறது.எனவே,புதிய வடிவமைப்புடன் கூடிய பாலியோ காரை வேறு பெயரில் அறிமுகம் செய்ய ஃபியட் திட்டமிட்டுள்ளது.

ஃபியட் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் கூறுகையில்,"புதிய முகப்பு தோற்றத்துடன் வேறு பெயரில் பாலியோ காரை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்.புதிய மாடலை அறிமுகப்படுத்துவதன் மூலம்,இந்திய மார்க்கெட்டில் 5சதவீத இடத்தையும்,வரும் 2014ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 1,30,000கார்களை விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Saturday, February 26, 2011, 11:15 [IST]
English summary
Fiat’s Palio will reenter into India in a new name and a refined facial changes. The move comes as Fiat intends to secure a marginal share in the Indian car market after a long spell of absence.The company’s VP for commercial said the company has been evaluating the prospects of this relaunch this there are lot of speculations in the market about this vehicle.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+