புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த ஃபியட் திட்டம்

இதனால், தனது கார் போர்ட்போலியோவை அதிகரித்துக்கொள்ள ஃபியட் திட்டமிட்டுள்ளது. இதற்காக, தனது செடிசி காம்பெக்ட் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்ட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுஸுகியுடன் இணைந்து செடிசி காம்பெக்ட் எஸ்யூவி காரை ஃபியட் வடிவமைத்தது. இந்த கார் நம்மூரில் மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் எஸ்எக்ஸ்-4 செடான் கார் பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டது. ஹங்கேரியிலுள்ள ஃபியட் தொழிற்சாலையில் இந்த கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காம்பெக்ட் ரக எஸ்யூவியான் செடிசியை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஃபியட் துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது செடிசி எஸ்யூவி ஐரோப்பிய தர நிலைகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்திய சாலை நிலைகள் மற்றும் தட்பவெப்பத்திற்கேற்ப செடிசியில் சில மாற்றங்களை ஃபியட் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த எஸ்யூவி ரூ.10 லட்சம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கான சாத்திக்கூறுகள் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Click it and Unblock the Notifications








