ஆட்டோமேட்டிக் கியர் வசதியுடன் சான்டா பீ: ஹூண்டாய் அறிமுகம்

Hyndai Santa Fe
அனைத்து சொகுசு வசதிகள் மற்றும் கம்பீர தோற்றம் பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் இந்தியாவில் நன்கு வளர்ச்சி பெற்று வருகிறது. இதனால், சின்னக் கார் மார்க்கெட்டில் காட்டும் ஆர்வத்தை பிரிமியம் எஸ்யூவி மார்க்கெட்டிலும் பல முன்னணி நிறுவனங்கள் காட்டி வருகின்றன.

நாட்டின் கார் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் ஹூண்டாய் நிறுவனம் தனது மார்க்கெட் பங்களிப்பை தக்கவைக்கும் விதமாக புதிய கார்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், தனது சான்டா பீ பிரிமியம் எஸ்யூவி காரின் ஆட்டோமேட்டிக் கியர் வசதிகொண்ட மாடலை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

4 வீல் டிரைவுடன், 6கியர்களை கொண்ட புதிய ஆட்டோமேட்டிக் கியர் வசதிகொண்ட சான்டா பீ டிரைவிங்கின்போது புதிய அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு தரும் என்று ஹூண்டாய் தெரிவித்துள்ளது. 2.2லிட்டர் சிஆர்டிஐ தொழில்நுட்பம் கொண்ட எஞ்சினுடன் மார்க்கெட்டில் கால் பதித்துள்ளது சான்டா பீ.

நிமிடத்திற்கு 4,000 சுழற்சியில் இந்த எஞ்சின் 197 பிஎஸ் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. மேலும், லிட்டருக்கு நம்ப முடியாத அளவில் 11.72 கிமீ மைலேஜ் கொடுக்கும் என்றும் ஹூண்டாய் தெரிவிக்கிறது. டெல்லியில் ரூ.24.36 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் சான்டா பீ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சான்டா பீ வாடிக்கையாளர் மத்தியில் ஹூண்டாய் பெயரை உயர்த்தியது. ஆனால், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே புக்கிங் பெற்று சான்டா பீயை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. மேலும், மற்ற கார்களைவிட விலை அதிகம் என்ற முத்திரையும் சான்டா பீக்கு இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, September 27, 2011, 11:02 [IST]
English summary
Hyundai Motors launched New automatic transmission variant Santa Fe SUV in India. The New Santa Fe equipped with six-speed automatic transmission and All wheel drive. It is priced at Rs.24.36 lakhs.(Ex-showroom Delhi)
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+