குறைந்த விலையி்ல் கார்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் வியூகம்

இந்தியாவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் குறைந்த விலை காராக சி 250சிடிஐ மாடல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் ரூ.27.75 லட்சம் விலையில் விற்பனை செய்து வருகிறது.
ஆனால், பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்1 மினி எஸ்யூவீ கார் ரூ.22 லட்சம் விலையிலேயே கிடைக்கிறது. இதனால்,புதிய வாடிக்கையாளர்களை பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்கள் கவர்ந்து வருகின்றன.
இதேபோன்று, ஆடி உள்ளிட்ட நிறுவனங்களும் குறைந்த விலை கார்களை இந்திய சந்தையில் களமிறக்கியுள்ளன. இதனால், சொகுசு கார் விற்பனையில் முன்னிலையில் இருந்த மெர்சிடிஸ் கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இதை சுதாரித்துக்கொண்ட மெர்சிடிஸ், அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ள ஏ மற்றும் பி ரக கார்களின் விலையை நிர்ணயிப்பதில், மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது மெர்சிடிஸ்.
இந்த இரண்டு கார்களையும் சந்தைக்கு சவாலான குறைந்த விலையில் அறிமுகப்படுத்த மெர்சிடிஸ் பென்ஸ் திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், இந்திய சந்தையில் மீண்டும் பழைய இடத்துக்கு முன்னேற முடியும் என்று மெர்சிடிஸ் நம்பிக்கையுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications








