ஒரே நிதியாண்டில் 1லட்சம் சரக்கு வாகனங்களை உற்பத்தி செய்து டாடா சாதனை

நாட்டின் முன்னோடி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், சரக்கு வாகன தயாரிப்பில் முன்னிலை வகிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக டாடா மோட்டார்சின் சரக்கு வாகன விற்பனை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், சரக்கு வாகன உற்பத்தியில் பல புதிய மைல் கற்களை டாடா பெற்று வருகிறது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இதுவரை ஒரு லட்சம் சரக்கு வாகனங்களை தயாரித்து டாடா மோட்டார்ஸ் புதிய சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் சரக்கு வாகன வர்த்தகப் பிரிவு தலைவர் கூறியதாவது:
"நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம். உண்மையிலேயே பெருமைப்படக்கூடிய தருணம் இது. ஒரே நிதியாண்டில் ஒரு லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை கிடைத்துள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.
நடப்பு நிதியாண்டு முடிவில் 22 சதவீத வளர்ச்சியை பதிவு செய்வோம் என்று எதிர்பார்க்கிறோம். விற்பனை வளர்ச்சிக்கு தகுந்தவாறு உற்பத்தியும் அதிகரிக்கப்படும். மேலும், பெரும் வரவேற்பை பெற்றுள்ள வேர்டு டிரக்கின் புதிய மாடல்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.


Click it and Unblock the Notifications








