'லீஃப் 'எலக்ட்ரிக் காரை முழு வீச்சில் டெலிவிரி கொடுக்க நிசான் தீவிரம்

Nissan Leaf
டோக்கியோ: லீஃப் எலக்ட்ரிக் காரை மார்ச் மாதம் முதல் முழு வீச்சில் டெலிவிரி கொடுக்கும் முயற்சிகளில் நிசான் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு துளியும் மாசு ஏற்படுத்தாத லீஃப் என்ற எலக்ட்ரிக் காரை நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 5 பேர் அமர்ந்து செல்லக்கூடிய ஹேட்ச்பேக் வகையை சேர்ந்த இந்த காரை ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் 160 கி.மீ., தூரம் பயணம் செய்யலாம் என்று நிசான் கூறியது.

இதையடுத்து, இந்த காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜப்பான், அமெரிக்க கார் சந்தையில் முக்கிய இடம் பிடித்துள்ள லீஃப் கார் ஐரோப்பிய சந்தைகளிலும் கால் பதித்துள்ளது.

லீஃப் காருக்கு நாளுக்கு நாள் கிராக்கி அதிகரித்து வருவதையடுத்து,உற்பத்தி இலக்கை அதிகரித்துள்ளது நிசான் நிறுவனம். இதுகுறித்து நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஜப்பானில் 20,000 கார்களும்,ஜப்பானில் 6,000 லீஃப் கார்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாதத்திற்கு 3,000 லீஃப் கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.வரும் மார்ச் மாதத்திற்குள்,இதை 4,000ஆக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வரும் செப்டம்பருக்குள் முன்பதிவு செய்யப்பட்ட கார்களை டெலிவிரி கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்,அமெரிக்காவி்லுள்ள டென்னிசி தொழிற்சாலையில் அடுத்த ஆண்டு முதலும்,சுந்தர்லேண்டு தொழிற்சாலையிலிருந்து வரும்2013ம் ஆண்டு முதலும் லீஃப் கார் உற்பத்தியை துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ரினால்ட் நிறுவனத்துடன் இணைந்து எலக்ட்ரிக் கார்களுக்கான லித்தியம் பேட்டரிகளை தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.அடுத்த நான்காண்டுகளில் ஆண்டுக்கு 5லட்சம் லித்தியம் பேட்டரிகள் வீதம் தயாரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 27, 2011, 17:17 [IST]
English summary
Nissan has chalked out its plan to expedite the delivery of its electric vehicle Leaf. Under these scheme, there may be increased shifts in its Japan factories to have the desired volume by this March end. As of now, the production volume has reached 3000 mark for this zero-emission car which was started for production some three months ago. Nissan is set to have the 4000 monthly units mark by the end of March for this Leaf in its japan's Oppama factory.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+