காரை பார்க்கிங் செய்வதில் பெண்கள் படுமோசம்- ஆய்வில் தகவல்

Car Parking Accident
பெண்களுக்கு காரை ஒழுங்காக பார்க்கிங் செய்யவே தெரியாது என சமீபத்தில் லண்டனில் வெளியிடப்பட்ட ஆய்வு கூறுகிறது.

இங்கிலாந்தை சேர்ந்த டிரைவிங் ஸ்டான்டர்ட்ஸ் ஏஜென்ஸி பெண்களின் டிரைவிங் திறமை குறித்து ஒரு ஆய்வை மேற்க்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியாகியுள்ளது.

அதில், பெண்கள் டிரைவிங் குறித்த பல விஷயங்களை இந்த ஆய்வு புட்டு புட்டு வைத்துள்ளது. இங்கிலாந்தில் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக டிரைவிங் டெஸ்ட்டுக்கு வரும் மூன்று பெண்களில் ஒருவர் பெயிலாகிவிடுகின்றனராம்.

கடந்த ஆண்டு மொத்தம் 1,70,000 பெண்கள் டிரைவிங் டெஸ்ட்டில் பெயிலாகி உள்ளனர். அதில்,55,000 பெண்கள் பார்க்கிங் செய்யத் தெரியாமல் ததுங்கிணத்தோம் ஆடி டிரைவிங் டெஸ்ட்டில் கோட்டைவிட்டுள்ளனர்.

இதேபோன்று, ஜெர்மனியை சேர்ந்த ரூர் பல்கலைக்கழக நிபுணர்கள் நடத்திய ஆய்வில்," ஆடி காரை பார்க்கிங் செய்ய சொல்லி ஆண், பெண் இருபாலரிடமும் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அந்த காரை பார்க்கிங் செய்ய ஆண்களைவிட பெண்கள் 20 வினாடிகள் கூடுதலாக எடுத்துக்கொண்டனர்.

இதேபோன்று, மிக்ஸிகன் பல்கலைகழக நிபுணர்களின் ஆய்வில்,ஆண்களைவிட பெண்கள் அதிக விபத்துக்களை ஏற்படுத்துவதாகவும், நான்கு சாலைகள் குறுக்கிடும் இடங்கள், கூர்மையான வளைவுகள் மற்றும் சரிவான சாலைகளில் கார் ஓட்டும்போது பெண்கள் மிகுந்த கஷ்டப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிதான். ஆனால், நம்மூர் பெண்கள் பார்க்கிங்கில் படு புத்திசாலி. வேணும்னா, டி-நகர் ரங்கநாதன் தெரு மேம்பாலத்துக்கு கீழே வந்து பாருங்க. நம்மூர் பெண்கள் எவ்வளவு அழகா காரை பார்க்கிங் பண்றாங்கண்ணு.(பின்னாடி பில்லர் இல்லாம இருக்கணும்டா சாமி).

More from DriveSpark

Article Published On: Tuesday, September 27, 2011, 16:35 [IST]
English summary
A study has revealed that women struggle to park their cars more than men. According to this study, one third of women failed in their driving tests mostly due to their inefficiency in parallel parking. Another study has revealed that women drivers tend to be involved in accidents more often despite driving lesser than men.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+