ரூ.1.26 கோடி விலையில் புதிய ஆடம்பர கார் :ஆடி அறிமுகம்

Audi A8 L
டெல்லி: 500 குதிரைசக்தி திறன் கொண்ட டபிள்யூ-12 எஞ்சின், 19 ஸ்பீக்கர்களுடன் 1,400 வாட்ஸ் பேங் அன்ட் ஒலுப்சென் ஆடியோ சிஸ்டம், அலுமினியம் ஸ்பேஸ் ப்ரேம், வயோனியா லெதர் மற்றும் பியானோ வுட் மரவேலைப்பாடுகள் என அமர்க்களமான அம்சங்கள் கொண்ட ஏ-8 எல் ஆடம்பர செடான் காரை ஆடி நிறுவனம் நேற்று இந்திய சந்தையில் அறிமுக்பபடுத்தியது.

ஏற்கனவே பல சொகுசு கார்களை விற்பனை செய்துவந்தாலும், இந்த காரில் ஆடி நிறுவனத்துக்குரிய கூடுதல் சிறப்பு வசதிகளுடன் வந்துள்ளது.

இந்த கார் அதிக வீல்பேஸ் கொண்டிருப்பதால், முன்வரிசை மற்றும் பின்வரிசை இருக்கைகளில் லெக்ரூம் என்று கூறப்படும் கால்களை நீட்டி உட்கார அம்சமாக இருக்கிறது.பின்பக்க இருக்கையின் நடுவில் ஃப்ரிட்ஜுடன் பொருட்கள் வைப்பதற்கான கன்சோல் இருக்கிறது. தலைசாய்த்துக்கொள்ள வசதியான ஹெட்ரெஸ்ட்டும் உண்டு.

முன்வரிசை இருக்கையின் பின்புறம் 10.1 இஞ்ச் அகலம் கொண்ட இரண்டு திரைகள் பொருத்தப்ப்டடுள்ளன. மேலும், எலக்ட்ரிகல் கன்ட்ரோல் மூலம் பின்பக்க இருக்கையை வெதுவெதுப்பாகவும், குளிச்சியாகவும் மாற்றும் வசதியில் ஏ-8 எல் தனது ஆடம்பரத்தனத்தை காட்டுகிறது.

6.3 லிட்டர் டபிள்யூ-12 எஞ்சின் 500 குதிரைசக்தி கொண்ட எஞ்சின் ஆற்றலை வாரி இறைக்கிறது. இது, 100 கிமீ வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் தொட்டுவிடும். 8 ஸ்பீடு கொண்ட டிரிப்ட்ரோனிக் கியர் பாக்ஸை கொண்டது. ஸ்டீயரிங் வீல் அடியில் கியர் மாற்றும் ஆப்சனல் லிவரும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

நவீன தகவல்தொடர்பு, புளூடூத், சன்ரூப், ரன்னிங் ஹெட்லைட்ஸ் என கலக்குகிறது ஆடி ஏ-8 எல். இந்த கார் நேற்றுதான் முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டாலும், ஏற்கனவே 20 கார்கள் புக்கிங் செய்யப்பட்டு விற்கப்பட்டுவிட்டதாக, ஏ-8எல் காரை அறிமுகம் செய்த ஆடி தலைவர் மைக்கேல் பெர்ஷ்க் தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில் இந்த காருக்கு ரூ.1.26 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 28, 2011, 12:13 [IST]
English summary
Audi India yesterday launched the new A8 L luxury sedan. The new model will cost Rs.1.26 crores (ex-showroom Maharashtra).The new A8 L luxury sedan is powered by a 6.3-litre FSI engine capable of generating 500bhp and 625Nm of torque. Such power will enable the A8 L to deliver sports car like performance. Audi India in its statement has said the A8 L can sprint to 100kmph from rest within 4.7 seconds.The Audi A8 L proves itself as a luxury sedan with features such as fully communication systems, bluetooth, sun roof, two monitors on the front seats, ambient interior lighting and much more.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+