கான்டினென்டல் ஜிடி ஆடம்பர கார் ஏப்ரலில் அறிமுகம்:பென்ட்லீ அறிவிப்பு

பிரிட்டனை சேர்ந்த பென்ட்லீ நிறுவனம், ஆடம்பர கார் தயாரிப்பில் உலக புகழ்வாய்ந்த நிறுவனமாக திகழ்கிறது. புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் கடந்த செப்டம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட பென்ட்லீ நிறுவனத்தின் புதிய கான்டினென்டல் ஜிடி மாடல் உலகம் முழுவதும் வாடிக்கையாளர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், புதிய கான்டினென்டல் ஜிடி மாடல் வரும் ஏப்ரல் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பென்ட்லீ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய வினியோகஸ்தரான டெல்லியை சேர்ந்த எக்ஸ்க்ளுசிவ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ்க்ளுசிவ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சத்ய பாக்லா கூறியதாவது:
"ஏப்ரலில் அறிமுகம் செய்யப்பட உள்ள கான்டினென்டல் ஜிடி ஆடம்பர கார், அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக இருக்கும். நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வசதி கொண்ட இதில், நவீன தொழில்நுட்பம் கொண்ட நேவிகேஷன் சிஸ்டம், டச் ஸ்கீரின் திரை கொண்ட வீடியோ பார்க்கும் வசதி ஆகியவை இருக்கும்.
இந்த, காரில் 5998சிசி திறன் கொண்ட ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.நான்கு வீல் டிரைவிங் கொண்ட இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 318 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. மேலும்,இதன் கூபே மாடல் வெளிப்புற வடிவமைப்பு கண்ணை கவரும் வகையில் இருக்கும்.
ஆடம்பர காரை விரும்புவர்கள் எதிர்பார்க்கும் அத்துனை அம்சங்களும் இதில் உண்டு.முன்பதிவு செய்து 5-6 மாதங்களில் டெலிவிரி கொடுக்கப்படும்,"என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








