செவர்லே பீட் டீசல் vs ஃபோர்டு பிகோ டீசல்: ஒப்பீட்டு அலசல்

Chevrolet Beat Vs Ford Figo
பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், வாடிக்கையாளர்கள் டீசல் கார்களின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர். பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது டீசலின் விலை குறைவு என்பதோடு, டீசல் கார்கள் அதிக மைலேஜ் கொடுக்கின்றன என்பதால், இரட்டிப்பு பயனை பெற முடியும்.

வாடிக்கையாளரின் நாட்டம் டீசல் கார்களின் திரும்பிய கையோடு, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தனது செவர்லே பீட்டின் டீசல் மாடலை உடனடியாக களமிறக்கிவிட்டது. ஸ்மார்ட்டெக் தொழில்நுட்பம் கொண்ட பீட் டீசல் எஞ்சின் அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதால், சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, குறுகிய காலத்தில் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள ஃபோர்டு பிகோ டீசல் கார் மார்க்கெட்டில் தனி இடத்தை ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில், இரண்டு கார்களில் எது சிறந்தது என்பதை கண்டறிய இரு கார்களின் அம்சங்களை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம்.

எஞ்சின்:

1.4 லிட்டர் கொண்ட பிகோ டியூராடார்க் டீசல் எஞ்சின் 68 பிஎச்பி திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது. இது அதிகபட்சமாக 160என்எம் டார்க்கை தருகிறது. அதேவேளை, 996சிசி திறன் கொண்ட பீட் ஸ்மார்ட்டெக் டீசல் 58 பிஎஸ் ஆற்றலையும், 150என்எம் டார்க்கையும் கொடுக்கிறது. ஆற்றலில் பிகோ முந்துகிறது.

வெளிப்புற வடிவமைப்பு:

இரண்டு இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அழகான ஹேட்ச்பேக் கார்கள். பிகோ அகலத்துடன் சற்று தாழ்வான வடிவமைப்பை பெற்றுள்ளது. ஆனால், பீட் சற்று வளத்தியாகவும், எடு்ப்பான வடிவமைப்புடன் வருகிறது. வெளிப்புற வடிவமைப்பில் இரண்டுமே அசத்துகிறது.

உட்புற வடிவமைப்பு:

பீட்டை விட பிகோ உட்புறம் அதிக இடவசதிகொண்டதாக இருக்கிறது. குறிப்பாக, பின்புற இருக்கை பீட்டைவிட பிகோவில் விசாலமாக தெரிகிறது.

அதேவேளை, ரியர் பவர் விண்டோஸ், அலாய் வீல்கள், டில்ட் ஸ்டீயரிங் போன்றவை பிகோவில் இல்லை. ஆனால், ஹைவேரியண்ட் பீட் காரில் ரூப் ரெயில்ஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், பனிவிளக்குகள், இபிஎஸ் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இருக்கின்றன.

மைலேஜ்:

பீட் டீசல் கார் லிட்டருக்கு 24 கிமீ (சோதனை நிலைகளில்) மைலேஜ் தருவதாக ஏஆர்ஏஐ சான்று அளித்துள்ளது. அதேவேளை, பிகோ டீசல் லிட்டருக்கு அதிகபட்சம் 19 கிமீ மைலேஜ் கொடுக்கிறது.

எது சிறந்தது?

விலை,மைலேஜ், சிறப்பம்சங்கள் ஆகியவற்றை வைத்து ஒப்பிட்டு பார்த்தால் பீட் மனதில் ஆழப்பதிகிறது. ஆனால், பிக்கப், இடவசதி ஆகியவற்றை வைத்து பார்த்தால் பிகோ பந்தயத்தில் முந்துகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 28, 2011, 12:01 [IST]
English summary
Beat diesel has presented itself as an incredibly lucrative option for small car buyers. With its aggressive pricing, and long features list, the Beat diesel may just turn out to be the game changer in its segment. The closest competition that the Beat diesel has is the Ford Figo Duratorq, which is considered an excellent value for money diesel hatchback in its segment. The Beat diesel, however, has managed to undercut the popular ford car by quite a substantial margin. Here’s the price comparison of the two models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+