டெல்லியில் ஃபெராரி ஷோரூம் திறப்பு:கார் புக்கிங்கும் ஆரம்பம்

டெல்லி ஜனகபுரி பகுதியில் 5,000 சதுரஅடி பரப்பளவில் இந்த ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஷோரூமில் ஃபெராரியின் கலிபோர்னியா, 458 இட்டாலியா மற்றும் 599 ஜிடிபி ஆகிய மூன்று கார்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, ஃபெராரியின் அனைத்து மாடல்களையும் இந்த ஷோரூமில் புக்கிங் செய்து வாங்கலாம் என ஃபெராரியின் அதிகாரப்பூர்வ இந்திய டீலரான ஷ்ரேயான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், கார்களுக்கான அதநவீன வசதிகள் கொண்ட சர்வீஸ் ஸ்டேஷனும் திறக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
ஃபெராரி தலைமை செயல் அதிகாரி அமிதியோ பெலிசா கூறுகையில், "அதிக எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் காலடி பதித்துள்ளோம். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் 100 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில மாதங்களில் மும்பையில் இரண்டாவது ஷோரூம் திறக்க இருக்கிறோம்," என்றார்.
டெல்லியில் ஃபெராரி கார்கள் ரூ.2.2 கோடி முதல் ரூ.4 கோடி வரையிலான விற்பனை செய்யப்பட உள்ளதாக ஷ்ரேயான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








