அடுத்த 18 மாதங்களில் புதிய கார்கள், மினிடிரக் அறிமுகம்: ஜெனரல் மோட்டார்ஸ்

Chevrolet Beat
அடுத்த 18 மாதங்களுக்குள் புதிய ரக கார்களையும், மினிடிரக்கையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியா கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீனாவை சேர்ந்த எஸ்ஐஏஎம் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துடன் இணைந்து புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் பீட் டீசல் காரின் அறிமுக விழா நடந்தது. இதில், ஜெனரல் மோட்டார்ஸ் துணைத்தலைவர் பாலேந்திரன் கலந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

"தமிழகத்தில் பீட் டீசலுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இதில், ஹேட்ச்பேக் கார், செடான் கார், மினிடிரக் ஆகியவை இடம்பெறும். புதிதாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் கார் மாடல்கள் அனைத்தும் தற்போது நாங்கள் விற்பனை செய்து வரும் மாடல்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 28, 2011, 12:10 [IST]
English summary
General motors planning to launch new car models and mini truck in next 18 months. This models are entirely different from the current cars, General motors vice president P.Balendran told reporters during the launch of Beat diesel variant in Tamilnadu.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+