ஜூலையில் செவர்லே பீட் டீசல் மாடல் அறிமுகம்:ஜெனரல் மோட்டார்ஸ் திட்டம்

Chevrolet Beat
டெல்லி: அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீட் காரின் டீசல் மாடலை வரும் ஜூலை மாதம் அறிமுகப்படுத்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் செவர்லே பிராண்டின் பீட் ஹேட்ச்பேக் காரை ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. இந்த கார் பெட்ரோல் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஸ்டைல், சொகுசு என அனைத்து அம்சங்களிலும் காம்பெக்ட் கார்களுக்கு இணையாக இருந்ததால், பீட்டுக்கு மார்க்கெட்டில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், பீட்டை மற்றுமொரு உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அதன் டீசல் மாடலை வரும் ஜூலையில் அறிமுகப்படுத்துகிறது ஜெனரல் மோட்டார்ஸ்.

புதிய பீட் 1.0 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருகிறது. இது 57 பிஎச்பி திறனையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக புதிய டீசல் பீட் கார் லிட்டருக்கு 24 கி.மீ. செல்லும் என ஜெனரல் மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

புதிய பீட் மார்க்கெட்டில் நுழைந்தவுடன் ஃபோர்டு பிகோ, வோக்ஸ்வேகன் போலோ, நிசான் மைக்ரா, மாருதி ஸ்விப்ட் மற்றும் ரிட்ஸ் கார்களின் மார்க்கெட்டை ஒரு கைபார்க்கும் என சந்தை நிபுணர்கள் அடித்து கூறுகின்றனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 28, 2011, 15:10 [IST]
English summary
General Motor’s is planning to soon launch its most anticipated car Chevrolet Beat’s diesel variant in the domestic market this July 2011.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+