மேபேக் சொகுசு கார் பிராண்டுக்கு விடை கொடுக்க மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு

Mabach 62
உலகப் புகழ்பெற்ற மேபேக் சொகுசு கார் பிராண்டின் சரித்திரம் முடிவுக்கு வர இருக்கிறது. வரும் 2013ம் ஆண்டு முதல் மேபேக் பிராண்டு கார்கள் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட மெர்சிடிஸ் பென்ஸ் முடிவு செய்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் கீழ் மேபேக் சொகுசு கார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் 57 மற்றும் 62 லிம்னாய்ஸ் ரகத்தை சேர்ந்த உயர்தர சொகுசு கார்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், மேபேக் கார்களின் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. இதனால், அந்த நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், மேபேக் பிராண்டில் புதிய மாடல்களை தயாரிக்கவும், அந்த நிறுவனத்தை மேம்படுத்த முதலீடு செய்யவும் மெர்சிடிஸ் நிறுவனம் விரும்ப வில்லை.

வரும் 2013ம் ஆண்டு முதல் மேபேக் பிராண்டில் கார் உற்பத்தியை முற்றிலும் நிறுத்திவிட மெர்சிடிஸ் முடிவு செய்துள்ளது.

இந்த முடிவை மெர்சிடிஸ் பென்ஸ் தலைவர் டெய்ட்டர் ஸெட்சே எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், உலகப் புகழ்பெற்ற மேபேக் பிராண்டின் சரித்திரம் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மெர்சிடிஸ் பென்ஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அந்த பிராண்டு தொடர்ந்து விற்பனையில் பின்தங்கி வருகிறது. எனவே, அந்த பிராண்டின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது.

57 மற்றும் 62 மாடல்களின் உற்பத்தி படிப்படியாக குறைக்கப்படும். டாப் வேரியண்ட் மாடலான எஸ்-600 புல்மேன் மாடலும் இதில் அடங்கும்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 28, 2011, 17:54 [IST]
English summary
Mercedes Benz has deceided to close of its luxury Maybach brand due to continuous loss. The familiar 57 and 62 limnois luxury car models production will stop from 2013.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+