இந்தியாவில் 3 மாடல்களுடன் வரும் மினி பிராண்டு: சென்னையிலும் ஷோரூம்

Mini Brand
பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கீழ் செயல்படும் பிரிட்டனை சேர்ந்த மினி கார் பிராண்டு அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் கால் பதிக்கிறது.

மினி பிராண்டின் புகழ்பெற்ற 3 டோர் கூப்பர் ஹேட்ச்பேக், கூப்பர் கன்வெர்ட்டிபிள், கன்ட்ரிமேன் எஸ்யூவி ஆகிய மூன்று மாடல்கள் முதலில் அறிமுகப்படுத்த இருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.

இதில், மினி சூப்பர் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் ரூ.20 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மினி சூப்பர் பிரிமியம் ஹேட்ச்பேக் கார் வோக்ஸ்வேகன் பீட்டிலுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும்.

மினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்யூவி 4 பேர் பயணம் செய்யும் வசதி கொண்டது. 1.6 லிட்டர் எஞ்சினுடன் வரும் இந்த மினி எஸ்யூவி 181 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அதிசக்தி வாய்ந்த எஞ்சின் கொண்டது. இந்த மினி எஸ்யூவி ரூ.18 லட்சம் முதல் ரூ.22 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

இதுகுறித்து பிஎம்டபிள்யூ தலைவர் ஆன்ட்ரியாஸ் சாப் கூறியதாவது:

"இந்தியாவில் அதிக பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கும் எஞ்சின் கொண்ட கார் மாடல்களை அறிமுகப்படுத்த இருக்கிறோம். வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மினி பிராண்டு கார்களை அறிமுகப்படுத்த உள்ளோம்.

முதலாவதாக, டெல்லியில் 2 ஷோரூம்களை திறக்க திட்டமிட்டுள்ளோம். மும்பையில் மூன்றாவது ஷோரூமையும் திறக்க திட்டமிட்டுள்ளோம்.

இதைத்தொடர்ந்து, சென்னை, பெங்களூர், புனே மற்றும் சண்டிகரில் ஷோரூம்களை திறந்து மினி பிராண்டு கார்களை விற்பனை செய்ய உள்ளோம்," என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Monday, November 28, 2011, 9:34 [IST]
English summary
British premium car maker Mini will be launched 3 models in India early next year. The company to launch iconic three-door Cooper Hatch, the Cooper convertible and the Countryman SUV in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+