இதுவரை 1,500 ரேபிட் கார்கள் புக்கிங்: உற்சாகத்தில் ஸ்கோடா

Skoda Rapid
கார் விற்பனை சரிவு கண்டு வரும் நிலையிலும் அதிக நம்பிக்கையுடன் தனது ரேபிட் செடான் காரை ஸ்கோடா ஆட்டோ சமீபத்தில் அறிமுகம் செய்தது.

வோக்ஸ்வேகன் வென்ட்டோ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஸ்கோடாவின் டிஎன்ஏ கொண்ட வடிவமைப்பு, வென்ட்டோவை விட குறைவான விலை ஆகிய காரணங்கள் ரேபிட் மீது வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளது.

இந்த நிலையில், ரேபிட் காருக்கு ஆன்லைன் புக்கிங் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்கோடா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஆன்லைன் புக்கிங் துவங்கப்பட்ட முதல் நாளிலேயே 18 ரேபிட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டன. இதுவரை ஆன்லைன் மூலம் 25 கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஷோரூம்கள் வாயிலாக இதுவரை 1,500 ரேபிட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக ஸ்கோடா தெரிவித்துள்ளது.

ரேபிட் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் ஸ்கோடா ஆட்டோ உற்சாகமடைந்துள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ விற்பனைப் பிரிவுத் தலைவர் தாமஸ் குயெல் கூறியதாவது:

"ரேபிட்டுக்கு எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வரும் டிசம்பருக்குள் 3,000 ரேபிட் கார்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், மாதத்திற்கு 2,000 ரேபிட் கார்களை விற்பனை செய்ய இலக்கு வைத்துள்ளோம். அடுத்த ஆண்டு எங்களது நிறுவனத்தின் மொத்த விற்பனையில் 50 சதவீத பங்களிப்பை ரேபிட் தரும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார்.

Article Published On: Monday, November 28, 2011, 12:41 [IST]
English summary
The Czech car maker Skoda Auto India's latest offering sedan Skoda Rapid receiving an overwhelming response from Indian buyers. It has crossed the 1,500 booking mark within days of launch.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+