டீசல் கார்களுக்கு கிராக்கி: பெட்ரோல் கார் உற்பத்தியை நிறுத்தியது ஜிஎம்

Chevrolet Spark
டீசல் கார்களுக்கு தேவை எகிடுதகிடாக அதிகரித்து வருவதால் பெட்ரோல் கார் உற்பத்தியை முழுவதுமாக நிறுத்திவிட்டதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் செவர்லே பிராண்டில் கார்களை தயாரித்து வருகிறது. ஸ்பார்க், பீட், யுவா, ஏவியோ, தவேரா மற்றும் கேப்டிவா எஸ்யூவி உள்ளிட்ட கார் மாடல்களை ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பெட்ரோல் கார்களுக்கான மவுசு வெகுவாக மார்க்கெட்டில் குறைந்துவிட்டது. அதேவேளை, டீசல் கார்களுக்கான தேவை எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகிறது.

இதனால், மார்க்கெட்டில் தேவையை கருத்தில்க்கொண்டு, பெட்ரோல் கார்கள் முற்றிலுமாக நிறுத்திவிட்டு டீசல் கார் உற்பத்தியை தீவிரப்படுத்தியிருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ கூறியுள்ளது. இதன்மூலம், வரும் பண்டிகை காலத்தில் கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு டீசல் கார்களை உடனுக்குடன் டெலிவிரி கொடுக்க முடியும் என்பதால் ஜெனரல் மோட்டார்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஜெனரல் மோட்டார்ஸ் கையிருப்பில் பெட்ரோல் கார்கள் தேவைக்கு அதிகமாகவும், டெலிவிரி கொடுக்க தயாராகவும் இருப்பதாகவும், ஆனால் அவை விற்பனையாகாததால் அந்த நிறுவனம் பெட்ரோல் கார்உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக கூறப்படு்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 29, 2011, 10:00 [IST]
English summary
General Motors has sid it had completely stopped production of petrol cars in its plants after demand for its diesel cars increased. GM is using its production lines to build diesel cars only. The fuel price difference between petrol and diesel has become so huge that people have virtually stopped buying them. The American carmaker has a huge stock of petrol cars ready for delivery and hence decided to stop production of petrol cars. Its dealers are also struggling to sell petrol cars even during the festive season.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+