ரூ.10.8 லட்சத்தில் புதிய குளோபல் எஸ்யூவியை களமிறக்கியது மஹிந்திரா

ஸ்கார்ப்பியோ, ஸைலோ கார்கள் மூலம் எஸ்யூவி,எம்பிவி வடிவமைப்பில் மஹிந்திரா நிறுவனம் புகழ்பெற்றது. சிறந்த வடிவமைப்பு, உறுதியான கட்டுமானம், அதிக மைலேஜ் ஆகிய அம்சங்களால் வாடிக்கையாளர் மத்தியில் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ மற்றும் ஸைலோ ஆகியவை பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் தனது புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்யூவி-500 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய எஸ்யூவி மார்க்கெட்டில் கடும் போட்டியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
உள்நாட்டு சந்தை தவிர தென்கிழக்க ஆசியா, மேற்கு ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யவும் மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. 2வீல் மற்றும் 4 வீல் டிரைவ் மாடல்களில் இந்த புதிய எஸ்யூவியை மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.
மேலும், யாருமே எதிர்பாராத வகையில் ரூ.10.8 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்து மற்ற எஸ்யூவி தயாரிப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மஹிந்திரா.
மஹிந்திராவின் வடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தை சேர்ந்த 200 எஞ்சினியர்களின் 4 ஆண்டுகால உழைப்பில் இந்த புதிய எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








