கார் கலரை வைத்து குணாதிசயத்தை கூறும் 'ஹைடெக்' ஜோதிடம்

Gold Colour Car
லண்டன்: கார் நிறத்தை வைத்து ஒருவர் எப்படிப்பட்ட குணாதிசயத்தை உடையவர்களாக இருப்பர் என்பதை கூறிவிட முடியும் என சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவு கூறுகிறது.

வண்ணங்களால் நிறைந்த வாழ்க்கையில் ஒவ்வொருவரும் விதவிதமான வண்ணங்களின் மீது ஈர்ப்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் போடும் சட்டை முதல் பொட்டு வரை இது பிரதிபலிக்கும்.

கார் வாங்கும்போதும், அவரவர்க்கு பிடித்த கலரிலேயே காரை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், காரின் கலரை வைத்தே ஒருவர் எப்படிப்பட்ட குணாதிசயங்களை கொண்டிருப்பர் என்பதை கூறிவிடமுடியும் என அடித்து கூறுகிறது நியூசீலேண்ட் ஹெரால்டு நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு.

சில்வர் நிறம்:

சில்வர் நிறத்தில் கார் வைத்திருப்பவர்கள் செல்வ செழிப்புடன் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர்கள். ஐபேடு உள்ளிட்ட நவீன சாதனங்கள் மீது கொள்ளை பிரியம் கொண்டவர்களாக இருப்பர்.

தங்க நிறம்:

இந்த கலரில் கார் வைத்திருப்பவர்கள் செல்வ வளம் மிக்கவர்களாகவும், சுதந்திரத்தை அதிகம் விரும்புவர்களாகவும் இருப்பர். பிறரிடம் அன்பு பாராட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளில்லை என்று கூறலாம்.

சிவப்பு நிறம்:

நவநாகரீகத்தை விரும்புவர்கள், அதி்காரத்தை கையில் எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள். கொள்கை பிடிப்பு கொண்டிருப்பதோடு, எந்த விஷயத்தையும் மூடி மறைக்காமல் பட்டென்று போட்டு உடைக்கவும் தயங்கமாட்டார்கள்.

வெள்ளை நிறம்:

எந்த விஷயத்திலும் அக்கறையுடன் செயல்படுவர். ஆழமான கருத்துக்களை தெரிந்து வைத்திருப்பர். நேர்மை, பண்பு உள்ளிட்ட குணாதிசயங்களை கொண்டவர்கள். எளிமையான வாழ்க்கையை விரும்புவார்கள்.

கறுப்பு நிறம்:

அதிகாரம் படைத்த பதவிகளில் இருப்பர். கட்டுப்பாடு, முன்எச்சரிக்கையுடன் செயல்படுவது, அதீத தன்னம்பிக்கை கொண்டவர்களாக பீடு நடைபோடுவர். ஓவிய கலை மீது மிகுதியான ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பர்.

நீல நீறம்:

வெளிர் நீல நிறம் கொண்ட கார்களை வைத்திருப்பவர்கள் மிகவும் அடக்கமாகவும், அமைதியான குணாதிசயத்தை பெற்றிருப்பர். எவ்வளவு டிராபிக் ஜாமில் மாட்டிக்கொண்டாலும், அதை பற்றி கவலைப்படாமல் எப்போதும் கூலாக இருப்பர். அடர்ந்த நீல நிற காரை வைத்திருப்பவர்கள் பிறரை சார்ந்திருக்கும் குணாதிசயத்தை கொண்வர்கள்.

பச்சை நிறம்:

செல்வ வளத்துடன் சரிவிகிதமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.

என்ன உங்களது கார் கலருக்கும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள குணாதிசயங்களும் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறதா?

More from DriveSpark

Article Published On: Friday, July 29, 2011, 11:03 [IST]
English summary
Our lives are filled with colors, from our carpet to our walls; our clothing to our transportation color is a big part of life. Every body has a favorite color, and there are many sources that will analyze your choice and find what it says about you and your personality. The color of your car also can say a lot about you. Here is a snapshot of what your car color says about you: So let’s take a look at the interesting and sometimes strange things that your preferred car color says about you.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+