அடுத்த மாதம் 25ந் தேதி எக்ஸ்-3 எஸ்யூவி அறிமுகம்: பிஎம்டபிள்யூ அறிவிப்பு

BMW X3 SUV
சென்னை: வரும் ஆகஸ்ட் 25ந் தேதி எக்ஸ்-3 எஸ்யூவி காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகப்படுத்த பிஎம்டபிள்யூ திட்டமிட்டுள்ளது.

மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்-3 மிட்சைஸ் எஸ்யூவி காருக்கு மாற்றாக இந்த புதிய எஸ்யூவி கார் அறிமுகம் செய்யபட இருக்கிறது.

புதிய எக்ஸ்-3 எஸ்யூவி 4 மாடல்களில் வருகிறது. இதில், இரண்டு பெட்ரோல் மாடலும், இரண்டு டீசல் மாடலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

தற்போதைய பிஎம்டபிள்யூ எக்ஸ்-3 எஸ்யூவி கார் 6ஸ்பீடு மேனுவல் டிரான்மிஷன் கொண்டதாக இருக்கிறது. ஆனால், புதிதாக வர இருக்கும் எஸ்யூவி 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

ஆனால், 2.0 லிட்டர் முதல் 3.5 லிட்டர் வரை 6 வெவ்வேறு வகை திறன் கொண்ட எஞ்சின் மாடல்களில் கிடைக்கும். இதில், 3.5 லிட்டர் எஞ்சின் ஆண்டிற்கான சிறந்த எஞ்சின் விருதை 6 முறை பெற்றுள்ளது.

இது 306 பிஎச்பி ஆற்றலையும், 400 என்எம் டார்க்கையும் கொடுக்க வல்லது. மேலும, 2.0 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் எஞ்சின்கள் டீசல் வேரியண்டுகளாக வருகிறது.

அதிகபட்சமாக மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல்வாய்ந்த இந்த கார் 10 வினாடிகளில் 100 கிமீ வேகத்தை எட்டும் ஆற்றல் படைத்தது.

இதன் டாப் வேரியண்ட் மாடலில் ஹெட் யுபி டிஸ்பிளே, பார்க்கிங் கேமரா, ஹெட்லைட்டை எலக்ட்ரானிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் இருக்கும்.

ஜெர்மனியிலிருந்து பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் இந்த கார்கள் அசெம்பிளிங் செய்து விற்பனைக்கு வரும்.

வரும் ஆகஸ்ட் 25ந் தேதி இந்த கார் புனேயில் நடைபெறும் விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆடி க்யூ-5, மெர்சிடிஸ் பென்ஸ் ஜி-கிளாஸ் எஸ்யூவி கார்களுக்கு கடும் சந்தை போட்டியை கொடுக்கும் வகையில் வரும் இந்த கார் ரூ.41.2 லட்சம் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2011, 14:08 [IST]
English summary
BMW India has confirmed that it will be launching the new X3 crossover SUV on August 25th. The new X3 will take on the Audi Q5 and the Mercedes-Benz G-Class. The X3 is the German carmaker's highest selling crossover the new model is expected to follow this success. BMW India will be building the new X3 in its plant near Chennai by using CKD kits. This will ensure the X3 will be priced competitively against its competitors. With a starting price of Rs.41.2 lakhs the new X3 will be available in both petrol and diesel variants.
 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+