ரூ.4,000 கோடியில் குஜராத்தில் புதிய கார் ஆலை: ஃபோர்டு அறிவிப்பு

ஆமதாபாத்திலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள நானோ கார் தொழிற்சாலைக்கு அருகில் இந்த புதிய தொழிற்சாலை அமைக்கப்படுகிறது.
கார்கள் மற்றும் எஞ்சின்களை தயாரிக்கும் ஒருங்கிணைந்த தொழிற்சாலையாக இது அமைகிறது. இந்த புதிய தொழிற்சாலை 400 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட இருக்கிறது.
மேலும், இந்த தொழிற்சாலை அமையும் பகுதியிலேயே உதிரிபாக தொழிற்சாலைகளும் அமைய இருக்கிறது.
ரூ,4,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த தொழிற்சாலை மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலையை அமைப்பதற்காக குஜராத் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும் ஃபோர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஃபோர்டு ஆசிய பசிபிக் மண்டல நிர்வாக அதிகாரி தலைவர் ஜோ ஹின்ட்ரிக்ஸ் கூறியதாவது:
"தொழிற்சாலை அமைப்பதற்கான சாதகமான சூழல், மனிதவளம், ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் துறைமுகம் உள்ளிட்ட அனைத்து சாதகமான சூழ்நிலையும் நிலவுவதால் தொழிற்சாலை அமைக்க குஜராத்தை தேர்வு செய்தோம்.
இந்த ஆண்டு இறுதியில் தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் துவங்கும். வரும் 2014ம் ஆண்டில் கட்டுமான பணிகள் நிறைவடைந்து கார் உற்பத்தி துவங்கப்படும். இதில், எஞ்சின் உற்பத்திக்கான பிரிவும் கட்டப்பட இருக்கிறது," என்றார்.


Click it and Unblock the Notifications








