ஒரு மாதத்தி்ல் 4,000 லிவா கார்கள் புக்கிங்: டொயோட்டோ

Toyota Liva
பெங்களூர்: அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் 4,000 லிவா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் தனது முதல் ஹேட்ச்பேக் காரான லிவாவை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது டொயோட்டோ.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கார் ரூ.3.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது.

டொயோட்டோவின் தரம் என்றும் நிரந்தரம் என்பதால், இந்த காரை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு ஒரு மாதத்தில் 4,000 லிவா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக டொயோட்டோ தெரிவித்துள்ளது.

இது கவுரமான புக்கிங் எண்ணிக்கைதான் என்றாலும், எதிர்பார்த்த அளவு லிவா புக்கிங் ஆகவில்லை என்று மார்க்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல் மாடலில் மட்டும் லிவா அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் புக்கிங் சற்று குறைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மற்றொரு முக்கிய காரணம், சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செவர்லே பீட் டீசல் கார்.

பெட்ரோல் விலை எகிறி வருவதால், பெட்ரோல் கார்களை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்க்க துவங்கியதும் புக்கிங் குறைந்ததற்கு காரணமாக இருக்கலாம் என்றும் மார்க்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், லிவா டீசல் காரை விரைவில் களமிறக்க டொயோட்டோ திட்டமிட்டுள்ளது. டீசல் மாடல் வந்தால் லிவாவின் மார்க்கெட் கணிசமாக உயரும் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2011, 11:02 [IST]
English summary
Toyota Motors recently launched their hatchback Toyota Etios Liva in the market. This new car was not able to get an overwhelming response as expected by the company. The new hatchback so far has been able to rope in only 4,000 bookings since its launch, one month ago. The main reason behind the slow response is that the car is available in the market only in the petrol variant. And the increase in the fuel prices in the country has already affected the sales of the petrol cars in the past few months. The company has launched this Toyota Liva in limited variants as they do not want to put much pressure on their new production line. Its for sure that the ifToyota Etios Liva Diesel variant is also launched in the market the the company will not be able to level the demand with its production.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+