மாருதி பரிசுப் போட்டியில் ஜெய்ப்பூர் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் பரிசு

சந்தையை போட்டியை சமாளித்து கார் விற்பனையை அதிகரிப்பது எப்படி? என்பது குறித்து புதுமையான யோசனைகளை தரும் வகையில் பரிசுப்போட்டி ஒன்றை மாருதி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
இரண்டாவது முறையாக அறிவிக்கப்பட்ட இந்த புதுமையான போட்டியில் சூப்பர் ஐடியா கொடுத்து வெற்றி பெறுபவருக்கு வேகன்-ஆர் காருடன் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என மாருதி நிறுவனம் கூறியது.
இதற்காக நாடு முழுவதும் உள்ள 19 நகரங்களில் போட்டியாளர்களுக்கான பதிவு நடந்தது. ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது புதுமையான விற்பனை யுக்தி யோசனைகளை தெரிவித்தனர்.
எழுத்துத் தேர்வு உள்பட பல கட்டங்களாக நடந்த இந்த பரிசுப்போட்டியில்,'கிரின் அன்ட் குட் ஸ்டோர்' என்ற தலைப்பில் ஆன் லைன் கார் விற்பனை குறித்து சிறந்த யோசனையை தெரிவித்த ஜெய்ப்பூரை சேர்ந்த அபர்ணா பட்னகர் என்ற இளம்பெண் முதலிடம் பிடித்து வேகன்-ஆர் திங் பிக் சேலஞ்ச்-2 வென்றார்.
பட்டத்தை வென்ற அபர்ணாவுக்கு, மாருதி வேகன்-ஆர் காருடன் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது. மாருதி வேகன்-ஆர் காரின் விளம்பர தூதரான நடிகர் மாதவன், வேகன்-ஆர் காரையும், ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசையும் அபர்ணாவுக்கு வழங்கினார்.
மேலும், அவர் தெரிவித்த சிறந்த விற்பனை யுக்தி யோசனைகள் மாருதி நிறுவனத்தின் விற்பனை கொள்கைகளில் இடம் பெறும் என்று ஏற்கனவே அந்த நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








