55 புதிய கார் மாடல்கள் வரிசை கட்டும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ

இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியாக கருதப்படும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வரும் ஆண்டு ஜனவரி மாதம் 5ந் தேதி துவங்க உள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலக அளவில் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களின் கவனத்தையும் இந்த ஆட்டோ ஷோ ஈர்த்துள்ளது.
மேலும், வேகமாக வளர்ந்து வரும் இந்திய மார்க்கெட்டில் தங்களது தொழில்நுட்ப வலிமையை பரைசாற்றிக்கொள்ளும் வகையில் இந்த ஆட்டோ கண்காட்சியை பயன்படுத்திக்கொள்ள அந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதற்காக, பல்வேறு நிறுவனங்கள் பல புதிய கார் மாடல்களை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், டெல்லி ஆட்டோ கண்காட்சியில் 55 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முதன்மையான முதல் 10 ஆட்டோ மொபைல் கண்காட்சியில் கூட இந்தளவுக்கு ஒரே நேரத்தில் 55 புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டது கிடையாது என்று ஆட்டோ நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்தளவுக்கு டெல்லி ஆட்டோ கண்காட்சியை அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றன.
இந்த கண்காட்சியில் போர்ச்சே, ஃபெராரி, புகாட்டி ஆகிய நிறுவனங்களும் கலந்து கொள்ள இருப்பதாக கண்காட்சி அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த கண்காட்சியில் புதிய மாடல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதனால், வாடிக்கையாளர், ஆட்டோமொபைல் துறையினர் மட்டுமின்றி கார் நிறுவனங்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படு்த்தியுள்ளது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ.


Click it and Unblock the Notifications








