அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரத்துக்கு ரூ.200கோடி:ஹூண்டாய் திட்டம்

By
Hyundai New Model
சென்னை: "அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளம்பரத்துக்கு ரூ.200கோடி செலவிடப்படும்;மேலும்,6 புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும்,"என்று ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ஐ.சி.சி.)அதிகாரப்பூர்வ கார் பார்ட்னராக பணியாற்றுவதற்கு ஹூண்டாய் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.விரைவில் துவங்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து,2015ம் ஆண்டு வரை ஐ.சி.சி.யின் கார் பார்ட்னராக ஹூண்டாய் மோட்டார்ஸ் செயல்படும்.

இதைத்தொடர்ந்து,உலககோப்பை போட்டியிலிருந்து,அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளம்பர பிரச்சாரங்களுக்காக ரூ.200கோடி செலவிட இருப்பதாகவும்,6புதிய கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு இயக்குனர் கூறியதாவது:

"உள்நாட்டு சந்தையில் தக்கவைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஐ.சி.சி.யுடனான ஒப்பந்தத்தின் மூலம்,கிரிக்கெட் போட்டிகளில் விளம்பரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மேலும்,விளம்பர பிரச்சாரங்களுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200கோடி செலவிடப்படும்.

விளம்பரங்கள் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பெற முடியும் என்று நம்புகிறோம்.இதுதவிர,ஆண்டுக்கு 2கார்கள் வீதம்,அடுத்த மூன்று ஆண்டுகளில் 6புதிய கார்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த ஆண்டு 6லட்சம் கார்களை விற்பனை செய்தோம்.இந்த ஆண்டு 6.3லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.மேலும்,'சாண்டா ஃபே' எஸ்யூவீ காரின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வரும் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் மாத துவக்கத்தில் சாண்டாவிற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்,"என்று கூறினார்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 10, 2011, 14:03 [IST]
English summary
Huyndai plan to retain its hold on domestic market as it has peaked its identity by allying with the International Cricket Conference for the ensuing World Cup event. In the process, the company will shell out Rs200 crore for the ad campaigns coinciding the event and for another five years. Starting from 2011, the six models will be phased on two for every year in another three year tenure, said its Director for Marketing and sales.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+