கடந்த ஆண்டில் இந்தியாவில் 9 கோடி வாகனங்கள்:ஏ.ஆர்.ஏ.ஆ. இயக்குனர் தகவல்

Cars
டெல்லி: கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 8.93 கோடி வாகனங்கள் இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு(ஏ.ஆர்.ஏ.ஐ.) தெரிவித்துள்ளது.

உலகில் வேகமாக வளரும் இரண்டாவது ஆட்டோமொபைல் சந்தையாக இந்தியா மாறியுள்ளது. நாளுக்கு நாள் புதிய வாகனங்களின் எண்ணிக்கை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடத்திய ஆய்வுகளின்படி நாட்டில் மொத்தம் 8.93 கோடி வாகனங்கள் இருப்பதாக ஏ.ஆர்.ஏ.ஐ. இயக்குனர் ஸ்ரீகாந்த் மராத்தே தெரிவித்தார்.

இதில், 35 சதவீதம் அளவிற்கு டீசல் வாகனங்கள் இருப்பதாக அவர் கூறினார். மேலும், ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய வளர்ச்சியை வைத்து கணக்கிடும்போது, வரும் 2015ம் ஆண்டில் நாட்டின் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 12.13 கோடியாக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், சி.என்.ஜி. மற்றும் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் கூறிய அவர் அதிக மைலேஜ் தரும் வகையிலும், குறைந்த கார்பன் வெளியிடும் வகையிலும் டீசல் எஞ்சின் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

More from DriveSpark

Article Published On: Sunday, May 1, 2011, 13:26 [IST]
English summary
There were around 89.3 million vehicles in India in 2010 and the number is likely to go up to 121.3 million by 2015, says ARAI director Shrikant Marathe. “Of these 89.3 million, only about 35 per cent are diesel vehicles,” Marathe told a conference.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+