சிக்கன நடவடிக்கையால் முதல் காலாண்டில் மஹிந்திரா லாபம் 7% உயர்வு

கடந்த நிதிஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது(ரூ.562.39 கோடி) தற்போது லாபம் 7.56 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும், முதல் காலாண்டில் மஹிந்திராவின் மொத்த வருவாய் 30.49 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.5,160.10 கோடியை மொத்த வருவாயாக பெற்றிருந்த அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் தற்போது ரூ.6,733.54 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டைவிட, ஜூனுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அந்த நிறுவனத்தின் வாகன விற்பனை 24.25 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 82,093 வாகனங்களை அந்த நிறுவனம் விற்பனை செய்திருந்தது. தற்போது அந்த நிறுவனம் 1,01,997 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








