வாகனம் ஓட்டும்போது டிரைவர்கள் தூங்குவதை தடுக்கும் புதிய சாதனம்

வாகனங்களை நீண்ட தூரம் ஓட்டும்போதும்,இரவு நேர பயணங்களின்போதும் டிரைவர்கள் உடல் சோர்வால் தங்களையும் அறியாமல் தூங்கி விடுகின்றனர். இதனால்,ஏற்படும் விபத்துக்களால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதை தடுக்கும் வகையில்,நோ நேப் என்ற சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கைக்கு அடக்கமாக இருக்கும் நோ நேப் சாதனத்தை டிரைவர் காதில் பொருத்திக்கொண்டால் போதும்; விபத்துக்கள் தூரம், என்று கூறலாம்.
இந்த சாதனம் டிரைவர் சிறிது கண் அயர்ந்தாலும், உடனடியாக எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்து டிரைவரை உஷார் படுத்திவிடும். தவிர, வாகனத்தில் பயணம் செய்யும் சக பயணிகளையும் நோ நேப் எச்சரிக்கை செய்யும்.
ரூ.350 விலையில் கிடைக்கும் இந்த சாதனத்தை http://www.thenonap.com/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








