சொக்க வைக்கும் அழகுடன் ரெனால்ட்டின் 'கேப்டர் கார்' அறிமுகம்!

By
Renault CAPTUR
பாரிஸ்: அசத்தலான தோற்றத்துடன் கேப்டர் என்ற புதிய கான்செப்ட் காரை அறிமுகப்படுத்தியுள்ளது பிரான்சை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் .

காம்பாக்ட் காரில்,ஸ்போர்ட்டி வடிவமைப்பை குழைத்து கேப்டரை உருவாக்கியுள்ளது ரெனால்ட். கேப்டரை பார்த்தவுடன்,இது அடுத்த தலைமுறைக்கான கார் என்று ஆணித்தரமாக கூறிவிட முடிகிறது.

எந்த கடினமான சாலைகளிலும் அலுங்கல் குலுங்கல் இல்லாமல் செல்லும் வகையில் சஷ்பென்ஷன் கேப்டரில் பொருத்தப்பட்டுள்ளது. 22 இஞ்ச் கொண்ட அகலமான வீல்கள் வெளிப்புறத்தை கம்பீரமாக காட்டுகிறது. இதன் கருப்பு வெள்ளை நிறம் கொண்ட அல்லாய் வீல் கிறங்கடிக்கிறது.

மேற்கூரையை தேவையில்லை என்றால் நீக்கிவிடலாம். இதன் பக்கவாட்டு கதவுகள் மேற்புறம் திறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதவுகளை திறக்கும்போது,வண்ணத்துப்பூச்சி தோற்றத்தை நினைவூட்டுகிறது.

பெரும்பாலான பகுதிகளில் ஆரஞ்சு வண்ணம் ஆக்கிரமித்துள்ளதால், ரம்மியமாக காட்சி தருகிறது. டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவை ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளதால், அவை கண்களை காந்தம் போன்று கவர்ந்திழுக்கிறது.

டிரைவருக்கு முன்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் சாலையில் முன்னாள் செல்லும் வாகனங்கள் மற்றும் உருவங்கள் தெரிகிறது. இரவில் வாகனத்தை ஓட்டும்போது டிரைவருக்கு இந்த திரை மிகவும் உதவிகரமாக இருக்கும்.

மேலும், ட்வின் டர்போ 1.6லிட்டர் டிசிஐ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் சுற்றுச்சூழல் மாசு விதிகளுக்கு ஏற்ற வகையில் குறைந்த கார்பன் டை ஆக்சைடை வெளியிடும்.இரட்டை கிளட்ச் (டுயல் கிளட்ச்) ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளதால் ஓட்டுவது எளிது.

சாகச பயணங்கள் செல்ல ஏற்ற வகையில் கேப்டரின் பின்பக்கம் அதிக இடவசதி உள்ளது. மொத்தத்தி்ல் உல்லாச படகில் பயணம் செய்வது போன்ற புதிய அனுபவத்தை கேப்டர் தரும் என்று ரெனால்ட் அடித்து கூறுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, February 13, 2011, 11:46 [IST]
English summary
Renault formally launched the new concept car CAPTUR.which is likely to reflect the company’s brand strategy. The car will be a coupling of sporty crossover and road car which may hit the headlines with its whole body charm.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+