சொகுசு கார்களை இறக்குமதி செய்ய ஏபி குழுமம் திட்டம்

சரக்கு மற்றும் பஸ் போக்குவரத்தில் புகழ்பெற்ற ஏபி குழுமம்,கார் விற்பனை,சொகுசு கார் சர்வீஸ் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.174 கோடி வர்த்தகம் செய்யும் ஏபி குழுமம்,அடுத்து சொகுசு கார்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஏபி குழும இயக்குனர் கூறியதாவது:
சொகுசு கார் விற்பனை சந்தை நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.பல கார் உற்பத்தி நிறுவனங்கள் சொகுசு கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால்,சொகுசு கார்களுக்கான சர்வீஸ் கட்டணங்கள் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.
சில சமயங்களில் வெளிநாடுகளிலிருந்து சர்வீஸ் இன்ஜினியர்களை வரவழைக்க வேண்டியுள்ளதால், விலைமதிப்பு மிக்க சொகுசு கார்களை வாங்க பலர் தயங்குகின்றனர். மேலும்,சில குறிப்பிட்ட நிறுவனங்களின் சொகுசு கார்கள் சந்தையில் கிடைப்பதில்லை.
இந்த குறைகளை போக்கும் வகையில்,உள்நாட்டில் தயாரிப்பில் இல்லாத, மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப கார்கள் இறக்குமதி செய்யப்படும்.
மேலும்,சொகுசு கார் சர்வீஸ் சென்டரும் எங்களிடம் உள்ளதால்,சர்வீஸ் பிரச்சினை இருக்காது. கார் உற்பத்தி நிறுவனங்களை விட குறைந்த கட்டணத்தில் தரமான சேவையை வழங்குவதால்,எங்களது திட்டத்திற்கு வரவேற்பு கிடைக்கும். தவிர,பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








